ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கோலிவுட்டின் ஒஸ்ட் டைரக்டர்களை பட்டியலிட்ட கிளாமர் நடிகை.. சகிலாவுடன் அளித்த வைரல் பேட்டி

90களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய படங்களில் கவர்ச்சி புயலாக கலக்கியவர் நடிகை சகிலா. இவருடைய படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் முன்னணி நடிகர்கள் பலரும் தங்களின் படங்களை ரிலீஸ் செய்யாமல் தள்ளி வைத்த சம்பவங்களும் அரங்கேறியது.

அப்படிப்பட்ட சகிலாவிற்கு இப்போது மார்க்கெட் சரிந்துவிட்டது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் பேட்டிகளின் மூலம் பல விஷயங்களை உடைத்து பேசிக் கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து பிரபல கிளாமர் நடிகையும் கோலிவுட்டின் ஒஸ்ட் டைரக்டர் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read: கிளுகிளுப்பாக வெளியான ஷகிலா பட ட்ரைலர்.. தாறுமாறாக வைரலாகும் வீடியோ

15 வயதிலிருந்து சினிமாவில் நடிக்க துவங்கிய கிளாமர் நடிகை விசித்ரா. இப்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி உள்ளார். இவர் வீரா, அமைதிப்படை, முத்து, வில்லாதி வில்லன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பின் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த விசித்ரா, இப்போது மறுபடியும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் விசித்ராவும் ஷகிலாவும் இணைந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அதில் ‘சினிமாவில் எனக்கு படு மொக்கையான கேரக்டர்கள் கொடுத்த அத்தனை இயக்குனர்களும் என்னை பொருத்தவரை ஒஸ்ட் டைரக்டர்கள் தான். ஏனென்றால் எங்களைப் போன்ற சில நடிகைகளுக்கு இருக்கக்கூடிய நடிப்பு திறமையை குறைத்து, ரொம்ப லீஸ்ட் கேரக்டர்களை கொடுத்து சினிமாவில் வளர விடாமலே செய்துவிட்டனர்.

Also Read: பாலிவுட் நடிகை நடித்துள்ள ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. ரிலீஸ் தேதியுடன் இணையத்தை கலக்கும் போஸ்டர்!

அதிலும் எங்களை படங்களில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்காகவே அழைப்பார்கள். ஆனால் அதை நேருக்கு நேராகவே சொல்லாமல், கேரக்டர் இருக்கக்கூடிய கதாபாத்திரம் தான் என நம்ப வைப்பார்கள். அங்கு போய் பார்த்தால் தான் தெரியும் ஐட்டம் பாடல் இருக்கக்கூடிய முதல் சீனிலும், கடைசி சீனிலும் மட்டுமே இருப்போம். நான் ஐட்டம் நடிகையாக நடிக்க தயார், ஆனால் அந்த கேரக்டருக்கு என்றே படத்தில் ஒரு சில காட்சிகளை கொடுக்கலாம்.

வெறும் பொம்மை மாதிரி வந்து ஆடிட்டு மட்டும் போவதற்காக தான் கவர்ச்சி நடிகைகளை பயன்படுத்துகின்றனர். இப்படி எல்லாம் செய்தவர்கள், அந்த காலகட்டத்தில் முன்னணி இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பது தான் காலக்கொடுமை. சினிமாவில் ஹீரோ உடன் கிளாமர் ஆர்டிஸ்ட் ஆக இணைந்து ஆடுவோம், அந்தப் பாடல் முடிந்தபின் அவர் எங்களை அறைந்து விட்டு கிளம்பி விடுவார் இதுதான் நடக்கும்’ என்று நடிகை விசித்ரா வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார்.

Also Read: ஷகிலாவை குத்தகைக்கு எடுத்த பிரபல டிவி.. எந்த நிகழ்ச்சியில் களமிறங்குகிறார் தெரியுமா?

- Advertisement -

Trending News