36 வருடங்களுக்கு முன்பே 8 மடங்கு வசூல் செய்த கமலின் விக்ரம்.. லோகேஷ்க்கு இருக்கும் பெரும் சவால்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 3-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் சென்னை உள்ளிட்ட திரையரங்குகளின் புக்கிங் செய்வதற்கு ரசிகர்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதற்காக 2 மில்லியன் ரசிகர்கள் டிக்கெட் புக் செய்வதற்கு ஆர்வத்துடன் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு முன்பே ஏற்கனவே 1986-ம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் 36 வருடங்களுக்கு முன்பே வசூல் சாதனையை படைத்திருக்கிறது. தற்போது அதே டைட்டிலை மீண்டும் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து எடுக்கும் படத்தில் பயன்படுத்தி வசூலை அள்ள மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார்.

கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் சுஜாதா கதை எழுதிய, பழைய விக்ரம் திரைப்படம் வெறும் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த படம் அப்போவே சுமார் ரூபாய் 8 கோடிக்கு வசூல் சாதனை புரிந்தது சொன்னால், இப்பொழுதும் பிரமிப்பூட்டுகிறது.

எனவே அந்த அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் கமலஹாசனுடன் சத்யராஜ், அம்பிகா, கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் உள்ளிட்டோர் தங்களுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள். இந்த படத்தில் கமலஹாசன் அருண்குமார் விக்ரம் என்ற கதாபாத்திரத்திலும், அவரை மிரட்டும் வில்லனாக சுகிர்தராஜா என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜும், கமல்ஹாசனின் மனைவியாக அம்பிகாவும் நடித்திருப்பார்கள்.

இப்படி அந்தக் காலத்திலேயே உலகில் ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான முதல் படமாக திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. அதற்கேற்றாற்போல் இந்த விக்ரம் படம் போட்ட காசுக்கு பங்கம் ஏற்படாத அளவுக்கு, ஒன்றுக்கு எட்டு மடங்கு வசூலை அள்ளி தந்து விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படமாக விக்ரம் படம் பார்க்கப்பட்டது.

இத்துடன் இந்த படத்தின் கூடுதல் பலமாக படத்திலிருக்கும் பாடல்கள்தான். ஆகையால் படத்தின் பாடல்களை எழுதிய வைரமுத்து, வாலி இருவரையும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கமலஹாசன், ஜானகி, சித்ரா உள்ளிட்டோரையும் சேரும்.