ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

டைட்டில் பாடல் வைக்கப்பட்ட முதல் படம்.. 45 வருடங்கள் கழித்து ரீமிக்ஸ் செய்த அனிருத்

இப்போது திரை துறையில் பிரபலமாக இருக்கும் பல விஷயங்கள் அந்த காலத்திலேயே ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒன்றாக தான் இருக்கிறது. அதில் டைட்டில் பாடல், ஹீரோக்களின் அறிமுக பாடல் என பல விஷயங்கள் அந்த காலத்து ஜாம்பவான்களால் ஆரம்பிக்கப்பட்டு இப்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக டைட்டில் பாடலை உருவாக்கியது யார் என்றும் அது எந்த படம் என்றும் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதன்படி பாலச்சந்தர் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் தான் இப்படி ஒரு விஷயம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

Also read: பின்னணி இசையால் வந்த பஞ்சாயத்து.. இளையராஜா, பாலச்சந்தர் மோதலுக்கு காரணமான படம்

நாகேஷ் கதையின் நாயகனாக நடித்திருந்த அந்த திரைப்படத்தில் முத்துராமன், மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன் என பலர் நடித்திருப்பார்கள். ஒரு இளைஞன் படித்து வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பதுதான் அந்த படத்தின் கதை. மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற அந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த டைட்டில் பாடலை எழுதியது கவிஞர் வாலி தான்.

பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் குரல் அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும். இவ்வாறு அனைவரையும் ரசிக்க வைத்த அந்த பாடலின் வரிகளை கேட்டு அறிஞர் அண்ணாவே மனதார பாராட்டினாராம். அதன் பிறகு தான் டைட்டில் பாடல் வைக்கும் முறையும் அடுத்தடுத்த இயக்குனர்களால் முன்னணி ஹீரோக்களின் படங்களில் பின்பற்றப்பட்டது.

Also read: 6 நிமிடத்தில் பாடலை எழுதிக் கொடுத்த தனுஷ்.. வாயை பிளந்த இசையமைப்பாளர்

அது மட்டுமல்லாமல் அந்த எதிர்நீச்சலில் இடம்பெற்றிருந்த பாடலை 2013 ஆம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்திற்காக அனிருத் ரீமேக் செய்திருந்தார். அப்போது இந்த காலத்திற்கு ஏற்ப பாடலின் சில வரிகளை கவிஞர் வாலி மாற்றி அமைத்தாராம். அந்த வகையில் வாழ்க்கையில் ஜெயிக்க போராடுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருந்த அந்த பாடல் இப்போதும் கூட அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக அந்த படம் தான் சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்பு முனையையும் ஏற்படுத்தியது. மேலும் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த அப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 22 கோடி வரை வசூல் லாபம் பார்த்தது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Also read: தனுஷ்- அனிருத் இடையில் அதிகரித்த விரிசல்.. பல கோடியை விட்டு எறிந்த சம்பவம்

- Advertisement -

Trending News