பிக் பாஸ் சீசன் 6 பைனலுக்கு செல்லும் முதல் போட்டியாளர்.. திட்டம் போட்டு காயை நகர்த்திய விஜய் டிவி

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதி வாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போது பிக் பாஸ் வீட்டில் விக்ரமன், அசீம், ஷிவின், அமுதவாணன், ஏடிகே, கதிரவன், ரக்ஷிதா மற்றும் மைனர் நந்தினி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடத்தப்பட்டது.

இந்நிலையில் முதல் ஆளாக யார் பைனால் லிஸ்ட்டாக செல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதன்படி இந்த வாரம் முழுக்க நிறைய டாஸ்க்கள் வைக்கப்பட்டது. எப்போதுமே விஜய் டிவி இறுதியில் உள்ள போட்டியாளர்களை கணக்கிட்டு பார்த்தால் எல்லாமே அதே தொலைக்காட்சியில் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.

Also Read : டிரெய்லரை வைத்து வசூலில் ஆட்டிப்படைக்க போகும் துணிவு.. அஜித்துக்கு முழு டான்ஸரான பிக் பாஸ் பிரபலம்

அதேபோல் இந்த சீசனிலும் ரக்ஷிதா, மைனா நந்தினி, அமுதவாணன் ஆகியோர் விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் தான். அதுமட்டுமின்றி ரசிகர்களின் பேர் ஆதரவுடன் இருக்கும் விக்ரமனும் விஜய் டிவியில் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் தான். இதன் மூலம் இவர்களில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற உள்ளனர்.

இதற்காக இப்போது திட்டம் போட்டு விஜய் டிவி காய் நகர்த்தி உள்ளது. அதாவது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் மூலம் முதல் ஆளாக அமுதவாணன் பைனல் லிஸ்ட் ஆக தேர்வாகியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான அமுதவாணன் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.

Also Read : 87 நாட்கள் பெய்டு ஹாலிடேக்கு வந்தீங்களா.? பிக் பாஸ் ரசிகையின் கேள்வியை வைத்து அசிங்கப்படுத்திய அசீம்

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இவருக்கு இருந்த நல்ல பெயர் போக போக குறைய ஆரம்பித்தது. அதிகமாக ஜனனியை வைத்து எல்லா விஷயங்களையும் அமுதவாணன் செய்து வந்தார். இதன் காரணமாக போட்டியாளர்கள் அமுதவாணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பு கதிரவன் மற்றும் சிவின் விவகாரத்தில் தேவையில்லாமல் அமுதவாணன் மூக்கை நுழைத்தார்.

இதனால் ரசிகர்களின் எதிர்ப்பை அமுதவாணன் சம்பாதித்தார். இவ்வாறு தொடர்ந்து இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றாலும் விஜய் டிவியின் பிரபலம் என்பதால் திட்டம் போட்டு ஃபைனலிஸ்ட் ஆக தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் அடுத்தடுத்து யார் பிக் பாஸ் டைட்டில் லிஸ்டில் செல்கிறார்கள் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Also Read : சும்மா தின்னுட்டு தின்னுட்டு டைட்டில வின் பண்ணலாம்னு நினைச்சீங்களா?. போட்டியாளர்களை வச்சி செஞ்ச பிக் பாஸ்