சிம்புவால் நாசமா போன படம்.. வெற்றி இயக்குனரின் கேரியரையே காலி செய்த சம்பவம்

Actor Simbu: சிம்புவையும் சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போல் இவர்கள் இருப்பார்கள். இதற்கு பல சம்பவங்களை நாம் உதாரணமாக சொல்லலாம். ஆனால் சிம்புவின் படம் ஒன்று பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனரின் மார்க்கெட்டையே காலி செய்தது பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.

அதாவது தில், தூள், கில்லி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் தரணி சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு ரிச்சா, ஜித்தன் ரமேஷ், ரேவதி உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. ஆனால் ரசிகர்களின் போதிய வரவேற்பு கிடைக்காததால் இது பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தது.

Also read: வில்லியாக மிரள வைத்த 5 நடிகைகள்.. சிம்புவை பாடாய்படுத்திய ரீமாசென்

இத்தனைக்கும் ஹிந்தியில் ஹிட்டடித்த தபாங் என்ற படத்தின் ரீமேக் தான் இப்படம். ஆனால் தமிழில் இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. இதற்கு முக்கிய காரணம் சிம்பு மட்டும் தான். அந்த காலகட்டத்தில் சிம்பு, தான் நடிக்கும் படங்களில் பல பிரச்சனைகளை கொடுப்பார் என்பது திரையுலகம் அறிந்தது தான்.

அப்படித்தான் இப்படத்திற்கும் அவருடைய குறுக்கீடுகள் அதிகமாக இருந்ததாம். அதிலும் யாரை ஹீரோயினாக போட வேண்டும் எந்த நடிகர்கள் நடிக்க வேண்டும் என்பதில் தொடங்கி காட்சிகள் வரை அனைத்திலும் இவர் ஏதாவது ஒரு கருத்து சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்.

Also read: யூட்யூபை அதிர வைத்த தளபதியின் 4 சாங்.. ஒரு நாளில் இவ்வளவு வியூஸா

இதனால் இயக்குனர் நினைத்தபடி படத்தை எடுக்க முடியாமல் திணறி இருக்கிறார். மேலும் சிம்புவுக்காக ஒவ்வொரு விஷயத்தை மாற்றப் போய் மொத்த படமும் சொதப்பலில் தான் முடிந்திருக்கிறது. இப்படி சிம்புவால் நாசமாய் போன இந்த படத்திற்கு பிறகு தரணி இதுவரை எந்த படத்தையும் இயக்கவில்லை.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கும் மேலாக அவர் படங்களை இயக்காமல் இருக்கிறார். அந்த வகையில் விக்ரம், விஜய்க்கு பெரும் அடையாளத்தை கொடுத்த இயக்குனர் இன்று ஆள் அட்ரஸ் தெரியாமல் போயிருக்கிறார். இதற்கு சிம்பு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இப்படி பல சேட்டைகளை செய்து வந்த அவர் இப்போது அதை எல்லாம் ஓரங்கட்டி நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also read: தளபதியின் 19 படத்திற்கு டான்ஸ் மாஸ்டர் ஆன ஒரே பிரபலம்.. 2000 பேருடன் ரணகளம் செய்த விஜய்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்