சம்மருக்கு சம்பவம் செய்யப் போகும் 4 ஜாம்பவான்களின் படம்.. கமல், அஜித்தை வைத்து களமிறங்கும் லைக்கா

ajith kamal lyca
ajith kamal lyca

4 films summer holidays: எப்பொழுது காய் நகரத்தினால் வெற்றி கிடைக்கும் என்கிற சூட்சமத்தை சினிமாவில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஆணிவேர் அக்குவேராக புரிந்து வைத்திருப்பார்கள். அப்படித்தான் இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு நான்கு ஜாம்பவான்களின் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்கள். அந்த வகையில் ஏப்ரல் மே மாதங்களில் மிகப்பெரிய சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது.

அதாவது பல வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த கமலின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்து எல்லா பஞ்சாயத்துக்கும் தீர்வு கிடைத்து விட்டது. அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் 10 அல்லது 11ஆம் தேதியில் அனைத்து திரையரங்களிலும் வெளியிடுவதற்கு ரெடியாகிவிட்டது.

அடுத்ததாக எந்தவித அப்டேட்டுமே தெரியாமல் கிணத்தில் போட்ட கல்லாகவே இருந்த விடாமுயற்சி படப்பிடிப்பும் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அஜித்தின் ரசிகர்களின் மனதை குளிர வைக்கும் விதமாக ஏப்ரல் 24 ஆம் தேதி அல்லது அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியிட போகிறார்கள்.

Also read: விக்ரம் கேரியரை தூக்கி நிறுத்திய சூப்பர் ஹிட் படம்.. 21 ஆண்டுகளுக்கு முன் சிங்கம் போல வந்த சியான்

மேலும் இந்த இரண்டு படங்களுமே லைக்கா நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. அதனால் கமல் மற்றும் அஜித்தை களம் இறக்கி வசூல் அளவில் இந்த ஆண்டு பெரிய லாபத்தை லைக்கா நிறுவனம் பார்த்து விடும். இவர்களைத் தொடர்ந்து வெற்றியை எப்படியாவது ருசித்தே ஆக வேண்டும் என்று உடலை வருத்திக்கொண்டு போராடி வருகிறார் சியான் விக்ரம்.

அந்த வகையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படம் வருகிற ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் ரிலீசாக போகிறது. அடுத்ததாக தனுஷ் இயக்கி, எழுதி நடித்து வரும் D50 படமும் சம்மருக்கு வெளிவரப்போகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் இவருக்கு ஜோடியாக நித்தியா மேனன் நடிக்கிறார்.

இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளிவந்த திருச்சிற்றம்பலம் நல்ல வசூலை வாரி குவித்தது. அந்த வகையில் இப்படமும் பெரிய லாபத்தை கொடுக்கும் என நம்பிக்கை வைத்து வருகிற ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி அன்று படத்தை ரிலீஸ் பண்ணிவிடலாம் என முடிவெடுத்து இருக்கிறார்கள். மேலும் இந்த நான்கு படங்களின் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளிவரும்.

Also read: விக்ரம், சூர்யாவுக்கு நடுவே இருக்கும் மிகப்பெரிய மனக்கசப்பு.. கல்யாணத்திற்கு கூட கூப்பிடாததற்கு இதுதான் காரணம்

Advertisement Amazon Prime Banner