கப்பு முக்கியம் பிகிலு.. ராஜுவுக்கு வாழ்த்துக் கூறுவது போல இப்பவே நூல் விட்ட தயாரிப்பாளர்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன்5. 18 போட்டியாளர்களுடன் களமிறங்கிய இந்த நிகழ்ச்சி தற்பொழுது ஒரு மாதத்தை நிறைவு செய்து இன்று வரை 13 போட்டியாளர்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.நேற்று எலிமினேஷன் இல் சுருதி வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் போட்டியாளர் ராஜூ ஜெயமோகன் தனது முதல் திருமண நாளை மனைவியுடன் சேர்ந்து கொண்டாடாமல் மிக்ஸ் பண்ணி வருத்தமடைந்தார். இவருக்கு பல திரையுலக பிரபலங்களும் திருமண வாழ்த்துக்களையும் அதோடுகூட இவர் போட்டியிலும் வெற்றி பெற்று வரவேண்டும் என்றும் வாழ்த்தி உள்ளனர்.

ராஜூ ஜெயமோகன் எழுத்தாளர், உதவி இயக்குனர், நடிகர் என பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கிறார். இவர் முதன்முதலில் சின்னத்திரையில்’கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும் இவர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

அதைத்தொடர்ந்து விஜய் டிவியின் பல சீரியல்களில் நடித்து வந்தார். சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில் வெற்றி கண்ட இவர் வெள்ளித்திரையிலும் கால்பதித்து வெற்றிகண்ட படம்தான் ‘நட்புனா என்னனு தெரியுமா’. இதில் இவர் இரண்டாவது கதாநாயகனாக அருமையாக நடித்திருப்பார்.

இப்பொழுது இவர் பிக் பாஸ் சீசன்5ல் கலந்து கொண்டு அற்புதமாகவும் அட்டகாசமாகவும் விளையாடி மக்களை கவர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாரிகா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இப்பொழுது முதல் திருமண நாளை மனைவியுடன் சேர்ந்து கொண்டாட முடியாமல் போன நிலையில் இவருக்கு திரையுலகினர் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் திருமண வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்ததோடு, பிகில் பட பாணியில் ‘கப்பு முக்கியம் பிகிலு’ என வெற்றி வாழ்த்தையும் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். வாழ்த்து கூறுவது போல இப்பவே ஹீரோவாக புக் செய்து விட்டீர்களா என்பது போன்ற கமெண்டுகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

RAJU-BB5
raju-bb5-cinemapettai