வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ரஜினியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் ஸ்டார் நடிகர்.. கமலின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் படம்

கடந்த சில வருடங்களாக சூப்பர் ஸ்டார் இடத்திற்கு டாப் நடிகர்கள் இடையே போட்டா போட்டி நடந்து வருகிறது. வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷனில் சரத்குமார் உட்பட சில பிரபலங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான நடிகர்கள் மேடையில் எது செய்தாலும் சூப்பர் ஸ்டார் தான் நினைவுக்கு வருகிறார்.

ஏனென்றால் அவருடைய பாடி லாங்குவேஜை அப்படியே மற்ற ஹீரோக்கள் பின்பற்றி வருகிறார்கள். சமீபத்தில் வாத்தி பட விழாவில் தனுஷ் பேசியதும் அப்படி தான் இருந்தது. இவ்வாறு ஒவ்வொரு ஹீரோக்களின் அடி மனதில் சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது.

Also Read : ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தலைவர்-170 அறிக்கை

இந்நிலையில் ரஜினியின் பயோபிக் படம் விரைவில் உருவாக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு என்றால் எல்லோருக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். பல மேடைகளில் ரஜினியே தன்னைப் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். இப்போது ரஜினியின் பயோபிக் படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளாராம்.

இந்தப் படத்தில் மணிரத்தினத்திற்கு உதவியாக இயக்குனர் சுதா கொங்கரா பணியாற்ற உள்ளார். மேலும் இந்த படத்தில் ரஜினியாக லிட்டில் ஸ்டார் சிம்பு நடிக்க உள்ளார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது சிம்பு உடனே ஓகே என்று சொல்லிவிட்டாராம். இந்த பிரம்மாண்ட கூட்டணியில் கமலும் இணைந்துள்ளார்.

Also Read : போலீஸ் வேடத்தில் பட்டையை கிளப்பிய ரஜினியின் 6 படங்கள்.. ஏகாம்பரத்தை வெளுத்து வாங்கிய அலெக்ஸ் பாண்டியன்

அதாவது தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் சூப்பர் ஸ்டாரின் பயோபிக் படத்தை கமல் தயாரிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தை 250 கோடி பட்ஜெட்டில் எடுக்க உள்ளார்களாம். அதிலும் சிம்புவும் இந்த படத்தில் நடிக்க அதிக சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளாராம். ஏனென்றால் ரஜினியின் பயோபிக் படத்தில் நடிப்பது பெரிய அந்தஸ்து.

ஆகையால் தயாரிப்பு நிறுவனத்திடம் இவ்வளவு சம்பளம் வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை போல ரஜினியின் பயோபிக் படமும் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. மேலும் இப்படம் கண்டிப்பாக சரித்திரம் படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஏனென்றால் சூப்பர் ஸ்டாரை இந்தியா முழுவதும் எல்லோருக்குமே தெரியும். அவருடைய பயோபிக் படம் உருவாகிறது என்றால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். ஆகையால் இந்த படம் உருவானால் கண்டிப்பாக மிகப்பெரிய சாதனை படைக்கும். இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது.

Also Read : நெகட்டிவ் ரோலில் தெறிக்கவிட்ட ரஜினியின் 5 படங்கள்.. புது அவதாரம் கொடுத்த மூன்று முடிச்சு

- Advertisement -

Trending News