Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-170

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தலைவர்-170 அறிக்கை

ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதன்பிறகு ரஜினி நடிக்கும் 170-வது படத்தின் பிரம்மாண்ட கூட்டணியை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நிமிடங்களுக்கு முன் வெளியாகி சோசியல் மீடியாவை பரபரப்பாகியுள்ளது.

ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து, அனிருத் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார். இவர்களுடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Also Read: ரஜினியால், மகன்களையும் ஒதுக்கும் தனுஷ்.. விவாகரத்திற்கு பின்னும் நிம்மதி இல்லாமல் தவிப்பு

தற்போது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ரஜினியின் 170-வது படத்தை லைக்கா ப்ரொடக்‌ஷன் தயாரிக்க, ஜெய் பீம் இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான திரைப்படங்களை படைத்தளிக்கும் சுபாஷ்கரன் தயாரிப்பில், லைக்கா புரொடக்ஷன் தலைமை பொறுப்பாளர் ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களின் தலைமையில் ‘தலைவர் 170’ திரைப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சூப்பர் ஸ்டார் சம்பளத்தில் கிள்ளி கொடுத்த சன் பிக்சர்ஸ்.. ஜெயிலர் படத்தில் விஜய் வில்லன் வாங்கிய சம்பளம்

இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைக்கா குழும தலைவர் சுபாஷ்கரன் அவர்களின் பிறந்த நாளான இன்று ‘தலைவர் 170’ படத்தைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ட்ரெண்டாக்கி உள்ளனர்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இதற்கு முன்பு ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த லைக்கா புரொடக்ஷன் 2024ல் மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராக உள்ளதாக ‘தலைவர் 170’ படத்தைக் குறித்து தனது ட்விட்டரில் பெருமிதம் கொண்டது.

Also Read: சினிமாவே வேண்டாம் என தெறித்து ஓடிய 6 ஹீரோயின்கள்.. சூப்பர் ஸ்டாருக்கு தங்கையான பின் சோலி முடிந்த கேரியர்

Continue Reading
To Top