ரஜினிகாந்தின் மகளுக்கு நாற்காலி கொடுக்காத பிரபல இயக்குனர்.. கொதித்தெழுந்த ரஜினிகாந்த்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். பொதுவாக அவரது திரைப்படங்களின் படப்பிடிப்பு என்றாலே அமைதியாக இருக்கும். ரஜினிகாந்திற்கு தங்கும் இடம், உணவு பரிமாறுதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் ராஜ மரியாதையுடன் தயாரிப்பு நிறுவனம் பார்த்து பார்த்து அத்திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்துவார்கள்.

அந்த வகையில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளுக்கு நாற்காலி கூட கொடுக்காமல் பிரபல இயக்குனர் ஒருவர் அசால்டாக நடந்துள்ளார். இதனால் ரஜினிகாந்த் கடுப்பாகி தயாரிப்பு நிறுவனத்தை விளாசியுள்ளாராம். 1999ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று இருந்தது.

Also Read : அடுத்தடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் 3 படங்கள்.. மணிரத்தினத்திற்கு விரித்த பிரம்மாண்ட வலை

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக சௌந்தர்யாவும், அவர்களுக்கு மகளாக விஜயகுமாரின் மகள் நடிகை பிரீத்தாவும், இரண்டாவது மகளாக நடிகை அனிதா வெங்கட்டும் நடித்திருப்பர். அப்போது ஒருநாள் படையப்பா படப்பிடிப்பின்போது கடும் வெயிலில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளாக நடித்த அனிதா வெங்கட் நாற்காலி இல்லாமல் அவரது தாயாரின் மடியில் அமர்ந்துள்ளார்.

இதை கண்ட ரஜினிகாந்த் அவரை அழைத்து ஏன் உன் தாயாரின் மடியில் அமர்ந்திருக்கிறாய், நாற்காலியில் அமர வேண்டியதுதானே என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அனிதா நாங்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் நாற்காலி கேட்டோம், ஆனால் இன்னும் வரவில்லை.ஆகையால் என் அம்மா மடியில் அமர்ந்து இருக்கிறேன், பரவாயில்லை என்று கூறி விட்டாராம்.

Also Read : தமிழ் சினிமாவின் மாற்றத்தை உணர்ந்த 4 நடிகர்கள்.. குறுக்கீடு செய்யாமல் ஒதுங்கும் ரஜினி மற்றும் கமல்

இதைக்கேட்ட ரஜினிகாந்த் உடனே மைக்கில் தயாரிப்பு நிறுவனத்தை அழைத்தவுடன் ஒன்றுக்கு 10 நாற்காலிகள் வரிசையாக வந்ததாம். உடனே ரஜினிகாந்த் தயாரிப்பு நிறுவனத்திடமும், கே.எஸ்.ரவிக்குமாரிடமும் எனது மகளாக நடிக்கும் ஓர் கதாபாத்திரத்திற்கு நீங்கள் நாற்காலி கூட கொடுக்க முடியாத, அப்போது எனக்கு என்ன மரியாதை,அனிதா வெங்கட் இத்திரைப்படத்தில் எனது மகள் என காட்டமாக தெரிவித்தாராம்.

பின்பு அனிதா நாற்காலியில் அமர்ந்த பின்னரே ரஜினிகாந்த் அவரது இருக்கையில் அமர்ந்தாராம்.இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்த நடிகை அனிதா வெங்கட் ரஜினிகாந்த் அவரது வாயால் தன்னை என் மகள் என்று சொல்லும்போது தான் மெய்சிலிர்த்து போனதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது அனிதா வெங்கட் சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : சுயம்பு போல் வளர்ந்து சாதித்த இயக்குனர்.. ஆலமரம் போல் தலையில் தூக்கி வைத்து ஆடும் ரஜினி, கமல்

Next Story

- Advertisement -