சந்திரமுகி 2 படத்தின் ஓடிடி ரைட்சை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. கல்லா கட்ட தயாரான லாரன்ஸ்

பி வாசு, ரஜினிகாந்த் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. கடந்த 2005 ஆம் ஆண்டு ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, நாசர் மற்றும் பல நடிப்பில் இப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி வாசு இயக்கி வருகிறார்.

எப்போதுமே தன்னுடைய படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினி விரும்ப மாட்டார். ரஜினியை ஆசனாக நினைக்கும் லாரன்ஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த வருகிறார். மேலும் ராதிகா, வடிவேலு போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

Also Read : ரீ-என்ட்ரி கைகொடுக்குமா.? கவர்ச்சி மூலம் வாய்ப்பை கெட்டியாக பிடித்த லாரன்ஸ் பட நடிகை

சந்திரமுகி 2 படத்தை லைக்கா தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஐந்து ஹீரோயின்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. லாரன்ஸ் சமீபத்தில் சந்திரமுகி 2 படத்திற்காக தனது உடம்பையே இரும்பு போல உடற்பயிற்சி மூலம் மாற்றிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட சூட்டிங் மைசூரில் நிறைவடைந்துள்ளது. அவ்வப்போது சந்திரமுகி 2 படப்பிடிப்பில் லாரன்ஸ், ராதிகா, வடிவேலு போன்றோர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பு முழுசாக முடியாத நிலையில் இப்போதே படத்திற்கான பிசினஸ் நடந்து வருகிறது.

Also Read : கையை உலக்கை போல் மாற்றிய லாரன்ஸ்.. சந்திரமுகி 2 படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் மாஸ்டர்

சந்திரமுகி 2 படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. ரஜினியின் சூப்பர் ஹிட் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் இந்த படத்தை வாங்க பிரபல ஓடிடி நிறுவனம் போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர்.

அந்த வகையில் நெட்பிளிக்ஸ் தற்போது சந்திரமுகி 2 படத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் நல்ல விலைக்கு இப்படத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு நெட்பிளக்ஸ் தளத்தில் சந்திரமுகி 2 படம் வெளியாக உள்ளது.

Also Read : பௌர்ணமி, அமாவாசை போல் இருந்த மாஸ் கெமிஸ்ட்ரி.. மணிரத்தினத்திடம் கோரிக்கை வைத்த ரஜினி

Next Story

- Advertisement -