புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

முத்துவை பகடைக்காயாக யூஸ் பண்ணும் குடும்பம்.. சூனியக்காரியாக சதி வேலையை பண்ணி எஸ்கேப் ஆகும் ரோகினி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஸ்ருதி மற்றும் ரோகினியின் தாலி பெருக்கு பங்க்ஷன் விழாவிற்கு அனைவரும் மண்டபத்திற்கு வந்து விட்டார்கள். ஆனால் முத்துவை கூட்டிட்டு வரும்போது மீனா போட்ட கண்டிஷன் தேவை இல்லாமல் வாயை திறந்து பேசக்கூடாது என்பதுதான்.

அதே மாதிரி முத்துவும் மௌன விரதமாக வாயை திறக்காமல் சைகை காட்டி மட்டும் பேசி வருகிறார். அத்துடன் முத்துவை தனியாக விடாமல் பக்கத்திலேயே மீனாவும் இருந்து எந்த பிரச்சினையும் நடக்க விடாமல் தற்போது வரை பார்த்து வருகிறார்.

முத்துவை சிக்க வைக்க பிளான் பண்ணும் ஸ்ருதி அம்மா

ஆனால் தாலி பெருக்கு பங்க்ஷன் வச்சதற்கு முக்கிய காரணமே முத்துவை இதில் அசிங்கப்படுத்தி பெரிய பிரச்சினையை உண்டாக்கி ஸ்ருதியை தனியாக கூட்டிட்டு போக வேண்டும் என்றுதான் இவருடைய அம்மா சுதா ப்ளான் பண்ணி இருக்கிறார். அதற்காக முத்துவை பகடைக்காயாக பயன்படுத்தி காரியத்தை சாதிக்க நினைக்கிறார்.

இதே மாதிரி ரோகினியும், மாமியார் குடும்பத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நம் மீது கவனம் திசை திரும்ப வேண்டும். அதற்கு முத்து ஏதாவது பிரச்சனை பண்ணி விட்டால் நாம் எஸ்கேப் ஆகிவிடலாம் என்று பிளான் பண்ணி இருக்கிறார். அதற்கு ஒரே வழி முத்து குடித்துவிட்டால் பிரச்சனை பண்ணி விடுவார். அதற்காக ஒரு ஆளை ரெடி பண்ணி முத்துவை வசமாக சிக்க வைக்கப் போகிறார்.

இப்படி குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் முத்துக்கு கட்டம் தீட்டி பிரச்சனையை கொடுக்கப் பார்க்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் முத்து முறியடித்து அனைவரது மூஞ்சிலும் கரியை பூசும் அளவிற்கு மீனா தரமான சம்பவத்தை செய்ய போகிறார்.

ரோகினியின் சுயரூபம் தெரிய வேண்டும்

ஆக மொத்தத்தில் இவர்கள் நினைத்தது எதுவும் நடக்கப் போவதில்லை. ஆனால் இந்த சுருதியின் அம்மாவை கூட கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். பணக்காரி மாதிரி வேஷம் போட்டு பல தில்லாலங்கடி வேலையை பண்ணி சூனியக்காரி மாதிரி குடும்பத்துக்குள் பிரச்சனையை உண்டாக்க நினைக்கும் ரோகிணி கூடிய சீக்கிரத்தில் மாட்ட வேண்டும்.

ஒன்னா, இரண்டு அடுக்கடுக்காக பொய்களை சொல்லி குடும்பத்தையும் கணவரையும் ஏமாற்றி வரும் ரோகிணி வசமாக சிக்கிவிட்டால் விஜயாவின் உண்மையான சுயரூபம் அப்பொழுது தெரியும். அந்த நாட்களுக்காக தான் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

- Advertisement -

Trending News