பிக்பாஸில் பணப்பெட்டியுடன் வெளியேறும் டம்மி போட்டியாளர்.. யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம்

இறுதிக்கட்டத்தில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசி எலிமினேஷனில் அமுதவாணனை தவிர அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இதில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

அதே சமயம் கடைசி வாரங்களில் பிக் பாஸ், போட்டியாளர்களுக்கு பணப்பெட்டியை அளித்து அந்தப் பெருந்தொகையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பை அளிப்பார். இவ்வாறு கடந்த சீசனில் கவின், கேப்ரில்லா, சிபி உள்ளிட்ட ஒரு சில போட்டியாளர்கள் பெட்டியுடன் வெளியேறிய நிலையில் இந்த சீசனில் யார் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: வரிசையாக பிக்பாஸில் என்ட்ரியாகும் சீசன்-7 போட்டியாளர்கள்.. அதிலும் பசுந்தோல் போத்திய நரியை இறக்கி விட்டுருக்காங்க!

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 7 போட்டியாளர்களுள் அசீம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்டோருக்கு தொடக்கத்திலிருந்து இப்போது வரை மக்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டிருப்பதால், அவர்கள் நிச்சயம் பணப்பெட்டிக்கு ஆசைப்பட மாட்டார்கள். அவர்கள் மூவரும் இறுதிச்சுற்றில் கலந்துகொண்டு எப்படியாவது 50 லட்சத்துடன் டைட்டில் வின்னராக வேண்டும் என்ற வெறியில் இருக்கின்றனர்.

மேலும் அமுதவாணன் டிக்கெட் டு பினாலே டாஸ்க் வெற்றி பெற்று அவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதியுடையவரானதால் அவரும் பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பில்லை. இப்போது மீதம் இருக்கும் 3 போட்டியாளர்களான ஏடிகே, கதிரவன், மைனா நந்தினி ஆகிய மூவரும்தான் டேஞ்சர் ஜோனில் இருக்கின்றனர். ஆகையால் இவர்கள் மூவருள் ஒருவர்தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்கள் ஓட்டின் அடிப்படையில் குறைந்த வாக்குகளுடன் வெளியேறப் போகின்றார்கள்.

Also Read: பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்.. 50 லட்சத்திற்கு மேல் அல்ல போகும் கில்லாடி

‘மரத்தில் இருக்கும் பலாப்பழத்தை விட கையில் இருக்கும் கலா காயே மேல்’ என வரும் வாரத்தில் கமலஹாசன் எலிமினேட் செய்வதை விட, சம்பளத்துடன் சேர்ந்து பணப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம் என மைனா நந்தினி முடிவெடுக்க போகிறார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் மைனா நந்தினி ரசிகர்கள் விரும்பிய சுவாரசியத்துடன் விளையாடாததால் அவர் டம்மி போட்டியாளராகவே தெரிந்தார். அதனால் அவரது இந்த முடிவு சரியான முடிவதான். மீதமிருக்கும் ஏடிகே, கதிரவன் இவர்களுள் ஒருவர்தான் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகின்றனர். அத்துடன் தற்போது பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் பலரும் வருகை தருவதால் இனிவரும் நாட்களில் பொங்கல் பண்டிகையும் களைகட்ட போகிறது.

Also Read: பிக் பாஸ் வீட்டில் நுழையும் இந்த சீசனின் வெளியேறிய போட்டியாளர்.. ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்

- Advertisement -