மீண்டும் அதே கதையை உருட்டும் இயக்குனர்.. விடாமல் சொறிஞ்சி தள்ளும் பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடர் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போது தான் கதையில் விழுந்தா முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து வருகிறது. வெண்பாவின் சுயரூபம் பாரதிக்கு தெரிய வந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக பாரதி மீது மிகுந்த கோபத்தில் இருக்கும் ஹேமா வீட்டை விட்டு அனாதை ஆசிரமத்திற்கு செல்ல முற்படுகிறார். அப்போது கண்ணம்மா நீ என் வயித்துல பிறந்த குழந்தை தான், லட்சுமியும் நீயும் அக்கா தங்கச்சி என உண்மையை போட்டு உடைக்கிறார்.

Also Read : பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

ஆனால் அதை ஏற்க மறுக்கும் ஹேமா கண்ணம்மாவிடம் பல கேள்விகள் கேட்கிறார். நான் எப்படி இங்க வந்தேன், எத்தனை தடவை என் அம்மா யாருன்னு கேட்டு இருப்பேன் நீங்க ஏன் சொல்லவில்லை என கண்ணம்மாவிடம் ஹேமா கேள்வி கேட்கிறார்.

ஒரு வழியாக எல்லாவற்றையும் சமாளித்து ஹேமாவை கண்ணம்மா நம்ப வைக்கிறார். இந்த ஹேமா கண்ணம்மாவை கட்டிக்கொண்ட அழுகிறார். இனிமேல் நான் ஏன் இங்கு இருக்க வேண்டும். உங்களுடனே வந்து விடுகிறேன் என ஹேமா கண்ணம்மா வீட்டுக்கு புறப்படுகிறார்.

Also Read : தனலட்சுமியிடம் சிக்கிய அடுத்த பலி ஆடு.. குறும்படம் பார்க்காமலேயே ரெட் கார்ட் கொடுக்கப்போகும் ஆண்டவர்

இதுவரை அம்மா தான் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த ஹேமாவுக்கு இப்போது அப்பா இல்லை என்பது போல நினைத்துக் கொண்டிருக்கிறார். பாரதி தான் இந்த குழந்தைகளுக்கு அப்பா என்பதை தெரியப்படுத்தாமல் ஒரே கதையை இயக்குனர் எவ்வளவு உருட்ட முடியுமோ அவ்வளவு உருட்டி வருகிறார்.

கிளைமேக்ஸ் நெருங்க உள்ளதால் விறுவிறுப்பாக செல்லும் என்று பார்த்தால் சும்மா இருந்தவனை சொறிஞ்சு தள்ளுவது போல ரசிகர்களுக்கு எரிச்சல் அடையும்படி கதை நகர்ந்து செல்கிறது. எப்போது தான் இதற்கு எண்டு கார்டு போடுவார்கள் என ரசிகர்கள் நச்சரித்து வருகிறார்கள்.

Also Read : பிக்பாஸில் வெளியேறிய போட்டியாளருக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்.. எதுல போய் முடிய போகுதோ சிவசிவா!

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -