ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வடிவேலுவை அவமானப்படுத்திய இயக்குனர்.. ஓவர் அலப்பறையால் ரணகளமான சூட்டிங் ஸ்பாட்

சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் வடிவேலு இப்போது முழுமூச்சில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அதை தொடர்ந்து தற்போது அவரின் கைவசம் இரண்டு திரைப்படங்கள் இருக்கிறது.

அதில் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகத்தில் வடிவேலுவின் காமெடி மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. அதனாலேயே பி வாசு இப்படத்தில் அவர்தான் நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்து கமிட் செய்தார். ஆனால் இப்போது எதற்காக அவரை நடிக்க வைத்தோம் என்னும் அளவுக்கு அவர் நொந்து போய் உள்ளாராம்.

Also read: வடிவேலு போல இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டே எஸ்ஜே சூர்யா.. செக் வைத்த தயாரிப்பாளர்

ஏனென்றால் வடிவேலு தனது நடவடிக்கையின் காரணமாக சில காலம் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். அதனால் ரீ என்ட்ரியில் அவர் நிறைய மாறி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்வளவு சர்ச்சைகளை சந்தித்தும் கூட அவருடைய அலப்பறையும், ஆணவமும் கொஞ்சம் கூட குறையவில்லையாம். அதற்கு மாறாக இன்னும் அதிகமாகி இருக்கிறதாம்.

அதனாலேயே சந்திரமுகி 2 பட சூட்டிங் ஸ்பாட் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறது. அதிலும் இயக்குனரை கடுப்பாக்கும் அளவுக்கு வடிவேலுவின் நடவடிக்கைகள் இருந்ததாம். மேலும் எந்த ஒரு விஷயத்திலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளாமல் ஓவர் திமிர் காட்டி பேசுவது என்று அவர் பயங்கர சேட்டை செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சரியான நேரத்திற்கு சூட்டிங் ஸ்பாட் வராமல் டிமிக்கி கொடுத்திருக்கிறார்.

Also read: வடிவேலு உதறி தள்ளிய படத்தில் ஹீரோவான விஜய்.. தளபதியின் கேரியரையே தலைகீழ புரட்டிப் போட்ட படம்

மேலும் சம்பள விஷயத்தில் கூட அவர் சில கெடுபிடிகள் காட்டினாராம். இது எல்லாவற்றிற்கும் மேலாக இயக்குனர் சொல்வதைக் கேட்காமல் அவர் இஷ்டத்திற்கு நடித்ததால் பி வாசு கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத இயக்குனர் வடிவேலுவை வெளியே போக சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதை எதிர்பார்க்காத அவர் இயக்குனர் தன்னை அவமானப்படுத்தி விட்டார் என்று அனைவரிடமும் புலம்பி இருக்கிறார். ஆனால் சமீபகாலமாக வடிவேலுவை பற்றி இதுபோன்ற புகார்கள் வருவது அதிகமாகி இருக்கிறது. ஏற்கனவே இவர் படப்பிடிப்பு தளத்தில் எப்படி நடந்து கொள்வார் என்பது பலருக்கும் தெரியும். அதனாலேயே பி வாசு குறித்து அவர் கூறும் புகார்களை பலரும் நம்ப மறுக்கிறார்கள்.

Also read: உங்க பருப்பு இங்க வேகாது.. விவேக், வடிவேலு ரெண்டு பேருக்கும் தண்ணி காட்டிய நடிகர்

- Advertisement -

Trending News