அட இவங்க தான் சில்க்கின் ஜெராக்ஸ் காப்பி.. வைரலாகும் மார்க் ஆண்டனி பிரியாவின் புகைப்படங்கள்

Mark  Antony Movie Silk: டைம் ட்ராவல் கதையை மையமாக கொண்டு சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் மார்க் ஆண்டனி படம் ஆடியன்ஸ்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வசூலில் வெறித்தனமாக வேட்டையாடி வருகிறது. இந்த படத்துக்கு போனால் 2 மணி நேரத்திற்கு எல்லா கவலைகளையும் மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம் என்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்து படத்தை வெற்றி அடைய செய்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த படத்திலும் மொத்தமாக ஸ்கோர் செய்திருப்பது எஸ் ஜே சூர்யா தான். ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்து திரையரங்குகளை அதிர வைத்திருக்கிறார். அதிலும் சில்க் ஸ்மிதாவை இவர் நேரில் பார்ப்பது போல் வரும் காட்சி தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த கேரக்டரில் நடித்த விஷ்ணு பிரியாவும் ட்ரெண்டாகிவிட்டார்.

Also Read:90ஸ் பாடல்களை மீண்டும் தியேட்டரில் அலறவிட்ட 4 படங்கள்.. லோகேஷை ஃபாலோ பண்ணும் இயக்குனர்கள்

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட விஷ்ணு பிரியா காந்தி முதலில் டிக் டாக்கில் தான் வீடியோக்கள் போட்டுக் கொண்டிருந்தார். அப்போதே இவர் பார்ப்பதற்கு சாயலில் மறைந்த நடிகை சிலக் ஸ்மிதா போல் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் இவர் தொடர்ந்து சிலுக்கை மேக்கப் செய்து போட்டோ மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கொண்டிருந்தார்.

சமீப காலமாக இயக்குனர்கள் தங்கள் எடுக்கும் படங்களில் நிறைய வித்தியாசங்களை செய்து வருகிறார்கள். அப்படித்தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய படம் டைம் ட்ராவல் கதையை மையமாகக் கொண்டு இருப்பதால் மறைந்த நடிகை சிலுக்கை வைத்து ஒரு காட்சியை எடுக்கலாம் என பிளான் பண்ணி விஷ்ணு பிரியாவை வைத்து எடுத்துவிட்டார். அந்த காட்சி இந்த அளவுக்கு வைரலாகும் என அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

Also Read:மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

விஷ்ணு பிரியாவுக்கு சிலுக்கை போல் மேக்கப் செய்து கிராபிக்ஸ் உதவியுடன் அப்படியே சிலுக்கை கண் முன் கொண்டு வந்து விட்டார் . அதிலும் இந்த காட்சியில் எஸ் ஜே சூர்யா கொடுக்கும் ரியாக்ஷன் மற்றும் அடியே மனம் நில்லுனா நிக்காதடி பாடலுக்கு அவர் போட்ட ஸ்டெப்பும் வேற லெவலுக்கு இந்த சீனை கொண்டு போய்விட்டது. இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு பிரியாவும் இணையதளங்களில் வைரல் ஆகிவிட்டார்.

                                            மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா சாயலில் இருக்கும் விஷ்ணு பிரியா

Vishnu Priya
Vishnu Priya

 

Priya Insta post
Priya Insta post
Reel silk
Reel silk

 

பலரும் இவர் சிலுக்கை போல் இல்லை, சில்க் ஸ்மிதா அழகிற்கு யாரும் இணையாக வர முடியாது என தங்களுடைய ஆதகங்களை சொல்லி வந்தாலும், ஆதிக் ரவிச்சந்திரன் எதை நினைத்து இந்த காட்சியை வைத்தாரோ அதைவிட பல மடங்கு ஜெயித்து விட்டார். இறந்து கிட்டத்தட்ட 27 வருடங்கள் கழித்து சிலுக்கும் மீண்டும் டிரெண்டாகி விட்டார்.

 

- Advertisement -