அஜித்துக்கு அடுத்து ஜாதகத்தை கணித்த இயக்குனர்.. அருண் விஜய்க்கு ஒர்க்அவுட் ஆன சுக்கிர திசை

அருண் விஜய் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தார். ஆனால் இயக்குனருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகி விட்டார். அதன் பின் பாலாக்கு எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் இந்த கதைக்கு அருண் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறது. அதன்பின் அருண் விஜய்க்கு வணங்கான் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவர் நடிக்க வந்த காலத்தில் அதாவது 2000 ஆம் ஆண்டு வருடத்தில் அருண் விஜய்க்கு பெரிய படங்கள் ஏதும் இல்லாமல், நடித்த படங்களும் தோல்வியடைந்தே வந்தது. இதனால் இயக்குனர்கள் யாரும் அவரே தேடி போவதில்லை. அப்போது தேவயானி கணவர் ராஜகுமாரன் அருண் விஜய்யை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டு அவரிடம் கதை சொல்லி இருக்கிறார். அவருக்கும் கதை பிடித்து போக தயாராகும் நிலையில் சில காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டது.

Also read: அருண் விஜய் படத்தில் நடித்த 2 நடிகர்கள்.. 3 பேருமே ஒரே குடும்பம்

இதற்கு என்ன காரணம் என்றால், தயாரிப்பாளர் இந்த படத்திற்கு ஹீரோ அருண் விஜய் என்று சொன்னதும் வேண்டாம் என்று போய்விட்டார். இதைத் தெரிந்த அருண் விஜய் ரொம்பவே அப்செட் ஆகி விட்டார். உடனே இவருடைய அப்பா விஜயகுமார், இயக்குனர் ராஜகுமாரனிடம் ஏன் இப்படி நடந்து விட்டது என்று கூறி ரொம்பவே வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். அப்போது இயக்குனர், அருண்விஜய் ஜாதகத்தை எடுத்துட்டு வாங்க நான் கணித்து சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஏனென்றால் ராஜகுமாரன், ஜாதகத்தை பார்த்து கணிக்கும் பழக்கம் உள்ளவர். பிறகு அவர் கேட்டபடியே விஜயகுமாரும், அருண் விஜய்யின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறார். இதை பார்த்த இயக்குனர் உங்கள் மகனுக்கு எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் சினிமாவில் மிகவும் பிரபலமாக வருவதற்கு நீங்கள் இன்னும் 20 வருடம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி அவரால் வளர முடியும் என்று கூறியிருக்கிறார்.

Also read: சூர்யா, அதர்வாவின் இடத்தை தட்டிப்பறித்த பாலாவின் அடுத்த ஹீரோ.. விறுவிறுப்பாக தொடங்கும் வணங்கான்

இதை கேட்டதும் விஜயகுமார் ரொம்பவே கண்கலங்கி என்னது 20 வருடம் காத்திருக்க வேண்டுமா அதற்குள் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ என்று மிகவும் நொந்து கிளம்பி விட்டார். ஆனாலும் அந்த நாளுக்காக அருண் விஜய் சும்மா காத்திருக்காமல் அவரால் முடிந்தவரை பல படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் எத்தனையோ படங்கள் வெற்றி, தோல்வியை பார்த்த நிலையிலும் முயற்சியை கைவிடாமல் போராடிக் கொண்டே தான் இருந்தார்.

அதே மாதிரி தற்போது 20 வருடம் கழித்து அருண் விஜய் நல்ல நிலையில் அனைவருக்கும் தெரிந்த முக்கிய கதாநாயகனாகவும், பெஸ்ட் வில்லன் ஆகவும் கலக்கி கொண்டு வருகிறார். இதை பற்றி விஜயகுமார், ராஜ்குமாரனை பற்றி மிகவும் பெருமிதமாக பேசி இருக்கிறார். இப்படித்தான் அஜித்தும் வெங்கட் பிரபுவின் ஜாதகத்தை கணித்து சொன்ன பிறகு தான் மங்காத்தா படம் வெற்றி அடைந்தது. இதே போல் அருண் விஜய்யின் வணங்கான் படமும் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும்.

Also read: பிள்ளையார் சுழி போடாத நிலையில் எண்ட் கார்டு போட்ட ஏகே 62.. அஜித்திற்கு கொடுத்த நெருக்கடி

- Advertisement -spot_img

Trending News