சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஒல்லியான சிம்புவை மறுபடியும் குண்டாக சொன்ன இயக்குனர்.. எரிச்சல் அடைந்து எஸ்டிஆர் செய்த செயல்

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி ஒவ்வொரு முறையும் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு மீண்டும் கம்பேக் கொடுத்து பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பவர் சிம்பு. இவருடைய பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் படாத பாடுபட்டு உடல் எடையை குறைத்த சிம்புவை மறுபடியும் குண்டாக சொன்ன இயக்குனருக்கு சிம்பு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். இதைப் பற்றி அவரே வெளிப்படையாக பேசி உள்ளார்.

Also Read: நயன்தாராவை விடாமல் துரத்தும் சிம்பு.. பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யம்

குண்டாக இருந்து பிறகு கஷ்டப்பட்டு மாநாடு படத்திற்காக குறைத்து நடித்தேன். அதன்பின் பத்து தல படத்தில் ஏற்கனவே குண்டாக இருக்கும்போது ஒரு சில காட்சிகள் நடித்து முடித்து விட்டேன். இப்போது நான் ஒல்லியாக ஆனதால் மீண்டும் குண்டாக சொன்னார் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா.

ஒரு கிலோவை குறைக்க பல மாதம் கஷ்டப்பட்டு இருக்கேன். அப்படி இருக்கையில் திடீரென இப்படி சொன்னால் என்ன செய்வது என அவரிடம் நான் புலம்பினேன். பின்னர் நானே யோசித்தேன் 110 கிலோ இருந்த நான் வேகமாக குறைத்த எனக்கு, மீண்டும் குண்டாகி குறைக்க முடியாதா என எனக்குள் கேள்வி எழுப்பி மீண்டும் குண்டாக தொடங்கினேன்.

Also Read: சிம்புவுடன் போட்டி போட தயாரான நடிகர்.. பத்து தலயுடன் வெளியாகும் 2 படங்கள்

படத்தில் இயக்குனர் சொன்னது போலவே நடித்து முடித்தேன். மீண்டும் ஏறிய உடம்பை குறைக்க பாங்காக் சென்று இரண்டு மாதம் தங்கி முழுமூச்சில் உடற்பயிற்சி செய்து இப்ப முழுவதும் குறைத்து விட்டேன்.

இருப்பினும் முதலில் இயக்குனர் சொல்லும்போது கோபம் வந்தது. ஆனால் இதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு செய்து முடித்தேன். இப்பொழுது படத்தை பார்க்கும்போது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சிம்பு கூறி இருக்கிறார்.

Also Read: சிம்புவின் தோற்றம் வெட்கமாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது.. நம்பி ஏமாந்த பத்து தல இயக்குனர்

- Advertisement -

Trending News