அஜித் மீது நம்பிக்கை இல்லாத இயக்குனர்.. ஏ கே உடன் போட்ட அக்ரீமெண்ட்

Actor Ajith: மாபெரும் வெற்றி படமான துணிவு படத்திற்கு பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இவர் மீது நம்பிக்கை இல்லாது இயக்குனர் ஒருவரின் செயல், அஜித் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் அஜித்திற்கு கிடைத்த தோல்விகள் மற்றும் அவமானங்கள் அதிகம். சினிமா மட்டும் அல்லாது பைக் ரைடிங்கில் ஆர்வம் காட்டி வந்த அஜித் ஆரம்பத்தில் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து அதனை அடிப்படையாகக் கொண்டு இன்று இத்தகைய இடத்தை பிடித்துள்ளார்.

Also Read: விஜய்யின் பின்னால் இருக்கும் பெரிய அரசியல் புள்ளி?. ஆடிப்போன மக்கள் இயக்க நிர்வாகிகள்

அவ்வாறு ஒரு வேஷ்டி விளம்பரத்தின் போது அஜித்தை பார்த்த இயக்குனர் வசந்த் தன் படமான ஆசை படத்தில் நடிக்க அழைத்துள்ளார். ஆனால் அவர் அழைப்புக்கு உடனடி பதிலை கொடுக்காத அஜித் சற்றும் பிடி கொடுக்காமல் பேசி உள்ளார். அதைக் கண்டு இயக்குனர் வசந்த், டைம் பாஸ் பண்ணுவதற்கு நடிக்க வந்த இளைஞன் என நினைத்து விட்டாராம்.

மேலும் அஜித்தை அழைத்து தம்பி நீங்கள் படத்தில் நடிப்பீர்களா உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்குதா இல்லையா . இல்லை இந்த படத்தோடு நின்று விடுவீர்களா என்றெல்லாம் பல கேள்விகளைக் கேட்டு அப்படத்தில் அஜித்தை நடிக்க வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டாராம் இயக்குனர் வசந்த்.

Also Read: தற்கொலைக்கு முயன்ற ரோபோ சங்கர்.. சாவின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்த அதிர்ச்சி காரணம்

மேலும் இவர் மீது நம்பிக்கை இல்லாது அக்ரீமெண்ட் போட்டு தான் ஆசை படத்தில் நடிக்க வைத்தாராம் இயக்குனர் வசந்த். அதைத்தொடர்ந்து இப்படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இடம் பெறுகிறார்கள் அதில் ஒன்று நீங்கள் மற்றொன்று சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பதாக கதையின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவரை நடிக்க வைத்தாராம்.

அதன்பின் தான் இப்படம் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றது. மேலும் அந்த காலகட்டத்தில் அஜித் தன் சக நடிகைகள் உடன் பேசி பழகியும் இருந்திருக்கிறார். ஆனால் தற்பொழுது இவரா இவர் என வியக்கும் அளவிற்கு எந்த நிகழ்ச்சியிலும் பங்கு பெறாது தனிமையை விரும்பி வருகிறார்.

Also Read: பாடல் மட்டும் வெளியாகி பல நாள் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. சூர்யா, கார்த்தி சேர்ந்து பாடிய குத்து பாடல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்