தற்கொலைக்கு முயன்ற ரோபோ சங்கர்.. சாவின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்த அதிர்ச்சி காரணம்

Actor Robo Sankar: ரோபோ சங்கர் பல மாதங்களுக்கு பிறகு இப்போது நிறைய யூடியூப் சேனலில் பேட்டி கொடுப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் முன்பு போல ரோபோ சங்கரிடம் இருந்த எனர்ஜி சற்று குறைவாகத்தான் இருக்கிறது. மேலும் இவ்வளவு நாள் தான் கடந்து வந்த பாதையை கூறி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளார்.

அதாவது சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் மாணவர்களுக்கு தனது வாழ்க்கையையே எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறார். நாலு மாசமாக யூடியூபில் சூப்பர் ஸ்டாராக நான் தான் இருந்தேன். தெரியா தனமாக ஒரு கிளியை வளர்த்தது குத்தமா? கிளி வளர்த்தால் பெயர் சொல்லும் என்பார்கள்.

Also Read: மீண்டும் கம்பேக் கொடுத்த ரோபோ சங்கர்.. நோயை விட கொடுமையானது இதுதான்

ஆனால் அது எந்த நாட்டு கிளி என்பது நமக்கு தெரியாது இதனால் பிரச்சனையை சந்தித்தேன். அதற்கு அடுத்தபடியாக சினிமாவுக்காக உடலை குறைத்தேன். அந்த சமயத்தில் தான் தனக்கு மஞ்சள் காமாலை வந்து விட்டது. அதற்குக் காரணம் என்னுடைய கெட்ட பழக்கம் தான். இதனால் 5 மாதம் கிட்டத்தட்ட படுத்த படுக்கையாகவே இருந்து சாவின் விளிம்பிற்கு சென்று வந்தேன்.

அந்த கெட்ட பழக்கத்திற்கு மிகவும் அடிமையானதால் அதிலிருந்து வெளிவர முடியாத சூழ்நிலையில் ஏற்பட்டது. மேலும் கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றது. ஏனென்றால் மது அருந்த முடியவில்லை என்றால் இது போன்ற எண்ணங்கள் வர ஆரம்பித்தது.

Also Read: அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன பிராங்ஸ்டர் ராகுல்.. ரோபோ சங்கர் போல் எடுத்த தவறான முடிவு

அந்த சமயத்தில்தான் நக்கீரன் பத்திரிக்கையாளர் கோபால் தன்னை சரியான மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்தார். நேரத்தில் என்னுடைய ரத்தத்தில் எவ்வளவு தூரம் மஞ்சள் காமாலை பாதித்ததால் உறுப்புகள் செயல் இழந்தது என்பது தெரிய வந்துள்ளது. அப்போது எனக்கு சிகிச்சை அளிக்கும் போது தூக்கம் இல்லாமல் குடும்பம் தான் என்னை பார்த்துக் கொண்டதாக ரோபோ சங்கர் கூறியிருக்கிறார்.

மேலும் சினிமாவில் உள்ளதால் பல பிரபலங்கள் தனக்கு ஆறுதல் கூறி இருந்தனர். இப்போது எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் மீண்டு வந்திருக்கிறேன். தினமும் உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு பழக்கவழக்கங்களால் மீண்டும் பழைய நிலைமைக்கு ரோபோ ஷங்கர் வந்துள்ளாராம். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read: பயில்வான் சொன்னது உண்மைதான் போல.. ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து உண்மையை உளறிய போஸ்

- Advertisement -