அவசரப்பட்டு இயக்குனர் செய்த காரியம்.. பாழாய் போன மகளின் வாழ்க்கை

ஒரு படத்தை எடுக்கவே பல வருடம் எடுத்துக் கொள்ளும் இயக்குனர் அவசரப்பட்டு மகள் வாழ்க்கையில் எடுத்த முடிவால் மனவேதனையில் தள்ளப்பட்டார். அதாவது சினிமாவில் இயக்குனருக்கு மிகப்பெரிய பெயர் உள்ளது. டாப் ஹீரோக்களே அவரது கால்ஷீட் கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவருக்கு இவ்வளவு செல்வாக்கு, சொத்து இருந்தும் நிம்மதி இல்லாமல் சுற்றி திரிந்தார். காரணம் அவரது மகளுக்கு பார்த்த மாப்பிள்ளை தான். அதாவது செல்வ செழிப்புடன் இருக்கின்ற குடும்பத்தில் உள்ள பையன் என்று அவரைப் பற்றி விசாரிக்காமல் மகளுக்கு திருமணம் முடித்து விட்டார்.

அதன் பிறகு தான் மாப்பிள்ளை சுயரூபம் தெரியவர இவருடன் வாழ முடியாது என மகள் வந்துவிட்டார். திருமணமாகி ஒரு வருடத்திற்கு உள்ளாகவே மகளின் வாழ்க்கை இவ்வாறு நடந்து விட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார். தவறான முடிவு எடுத்து விட்டோமே என்று இயக்குனர் நிலைகுலைந்து போய்விட்டார்.

Also Read : கடுப்பில் போனை கட் செய்த ஹீரோ.. விரத்தியில் கிரஷ் நடிகை

மேலும் தன்னால் ஏற்பட்ட பிரச்சனைக்கு தானே முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து ஒரு நல்ல முடிவுக்கு வந்துள்ளார். அதாவது தன்னுடன் பழங்காலமாக பழகி வந்த நபரை இப்போது தனது மகளுக்கு திருமணம் முடிக்க இருக்கிறார். அந்தப் பையன் இவர்களை காட்டிலும் வசதி குறைவு என்றாலும் தங்கமான குணம் உடையவர்.

ஆரம்பத்திலேயே நிதானமாக யோசித்து இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. ஆனாலும் கால தாமதமும் நன்மைக்கே என்பது போல இப்போது மகளின் முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாத நிலையில் இரண்டாவது வாழ்க்கையை இயக்குனர் அமைத்துக் கொடுக்க உள்ளார்.

Also Read : பொட்டி பாம்பாய் அடங்கிய ஹீரோ.. காரியத்தை சாதித்துக் கொண்ட மனைவி

Sharing Is Caring:

அதிகம் படித்தவை