வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

குணசேகரனை தோற்கடிக்க போகும் மருமகள்கள்.. கூடவே இருந்து குழி பறிக்க போகும் குடும்பம்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் இடமிருந்து தர்ஷணியை காப்பாற்ற வேண்டும் என்று ஜனனி ஒரு பக்கம் போராடி வருகிறார். இன்னொரு பக்கம் சித்தார்த்தை கடத்தி வைத்து கதிர் ஆடு புலி ஆட்டம் ஆடுகிறார்.

இந்த நிலையில் யார் தடுத்தாலும் என் மகனுக்கும் குணசேகரன் மகள் தர்ஷினிக்கும் கல்யாணத்தில் நடத்தி வைப்பேன் என்று உமையாள் தீர்மானமாக இருக்கிறார். இதற்கு இடையில் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி அஞ்சனா மற்றும் ஜனனியின் அம்மாவை மறைத்து வைத்து சித்தார்த்தை கூட்டி வந்துவிடலாம் என்று தேடி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சக்தி, சித்தார்த் இருக்கும் இடத்திற்கு போய் அடித்து வாய்க்கு வந்தபடி திட்டி விடுகிறார். அதாவது உன்னால் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம். இப்படி அமைதியாக இருப்பதற்காகவா அஞ்சனாவை காதலித்தாய் என்று கேட்கிறார்.

அத்துடன் உன்னுடைய குடும்பம் ஜனனி குடும்பத்தை கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார். அதற்கு சித்தார்த், என்னை அவர்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டால், அஞ்சனா குடும்பத்தை ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

எப்படியாவது என் அம்மாவின் காலில் விழுந்தாவது நான் அஞ்சனாவை விட்டுவிட சொல்கிறேன் என்று சொல்கிறார். உடனே சக்தி, நீ போயிட்டனா தர்ஷினி வாழ்க்கை நாசமா போய்விடும். அதனால் உன்னை நான் இப்போதைக்கு விடமாட்டேன் என்று சொல்லி விட்டார்.

ஏமாறப்போகும் குணசேகரன்

அடுத்து ஜனனியும் குற்றவையும் அஞ்சனாவை கண்டுபிடித்து குணசேகரன் இடம் இருந்து தர்ஷினியை காப்பாற்ற வேண்டும் என்று போகிறார்கள். அதே மாதிரி ஈஸ்வரியும் தன் மகளின் வாழ்க்கைக்காக போராடி வருகிறார். இப்படி ஒவ்வொருவரும் எப்படியாவது குணசேகரனை தோற்கடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த கல்யாணத்தை நிறுத்தி குணசேகரன் உண்மையான முகத்திரையை காட்டி விடுவார்கள். அடுத்ததாக உமையாளின் குடும்பத்திற்கும் இந்த கல்யாணம் பிடிக்கவில்லை. அதனால் அவர்களும் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

ஆக மொத்தத்தில் இந்த கல்யாணத்தின் மூலம் குணசேகரன் மற்றும் உமையாளுக்கு மிகப்பெரிய தோல்வி காத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

Trending News