13வது வாரத்தில் வெளியேறப் போகும் போட்டியாளர்.. இவ்வளவு நாள் தாக்கு பிடித்ததே பெருசு!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். தற்போது பிக் பாஸ் வீட்டில் 8 பேர் உள்ளனர். அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, ரக்ஷிதா, கதிரவன், ஏடிகே மற்றும் அமுதவாணன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இதில் டிக்கெட் டு பின்னாலே மூலம் பைனலுக்கு முதல் ஆளாக சென்றுள்ளார் அமுதவாணன். ஆகையால் மீதமுள்ள போட்டியாளர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர். இதில் விக்ரமன், அசீம், ஷிவின் மூவரும் பைனல் லிஸ்ட் என்பது ஆரம்பத்திலேயே நிர்ணயிக்கப்பட்டது தான்.

Also Read: சும்மா தின்னுட்டு தின்னுட்டு டைட்டில வின் பண்ணலாம்னு நினைச்சீங்களா?. போட்டியாளர்களை வச்சி செஞ்ச பிக் பாஸ்

ஏனென்றால் ஆரம்பத்திலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுறுசுறுப்பாகவும், எல்லா டாஸ்கிலும் தங்களது திறமையை திறம்பட காட்டி வருகிறார்கள். ஆகையால் மற்ற போட்டியாளர்களில் இருந்து ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. அதன்படி கடந்த வாரம் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இப்போது அவரைத் தொடர்ந்து 13 வது வாரம் எலிமினேட்டாகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது ரக்ஷிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரக்ஷிதா அடுத்தடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

Also Read: சோசியல் மீடியாவில் வழுக்கும் எதிர்ப்பு.. பிக் பாஸ் எலிமினேஷனை குறித்து கொந்தளித்த ஆர்மி

சாதாரணமாக வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு இணையான ரசிகர் கூட்டம் இவருக்கும் இருந்தது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இவருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவற்றை ரக்ஷிதா பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு விஷயத்துக்கும் குரல் கொடுக்காமல் மௌனம் சாதித்து வந்தார்.

அதுமட்டுமின்றி ராபர்ட் மாஸ்டர் தன்னிடம் எல்லை மீற முற்பட்டபோதும் ரக்ஷிதா எதுவுமே செய்யாமல் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. மேலும் டாஸ்கிலும் அதிக ஈடுபாடு காட்டவில்லை. ஆகையால் தான் குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிக் பாஸ் வீட்டில் அவர் நினைத்ததை சாதித்தாரா என்பது சந்தேகம் தான்.

Also Read: யாரும் எதிர்பார்க்காத பிக் பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரி.. டிஆர்பியை தக்க வைக்க மாஸ்டர் பிளான்