ஓட்டிங்கில் அர்ச்சனாவுக்கு டஃப் கொடுக்கும் போட்டியாளர்.. போற போக்க பாத்தா டைட்டில் வின்னர் ஆயிடுவார் போலையே!

BB7 Tamil: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மணி டாஸ்க் கொடுக்கப்பட்டு மூன்று நாட்களாகியும் இன்றுவரை அந்த பணப்பெட்டியை யாருமே எடுப்பதாயில்லை. இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அத்தனை பேருக்குமே டைட்டில் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்ற சீசன்களை பொறுத்த வரைக்கும் அந்தப் போட்டி 50 அல்லது 60 நாட்களை கடந்த பிறகு யார் வெற்றி பெறுவார்கள் என ஓர் அளவுக்கு கணித்து விட முடியும். ஆனால் இந்த சீசனில் மட்டும்தான் 90 நாட்களைக் கடந்தும் யார் அந்த டைட்டில் வின்னர் என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இதுவரையிலும் அர்ச்சனா தான் டைட்டில் வின் பண்ணுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மற்றொரு போட்டியாளர் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

கடந்த வாரம் டபுள் எலிமினேஷனில் ரவீனா மற்றும் நிக்சன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள். அதைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷனில் வீட்டில் இருக்கும் எட்டு பேரும் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வார ஓட்டிங்கில் தான் அர்ச்சனாவுக்கு போட்டியாக முன்னேறிக் கொண்டிருக்கும் போட்டியாளர் யார் என்பது தெரிய வந்திருக்கிறது.

Also Read:இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர்தான்.. தொட முடியாத உயரத்தில் அர்ச்சனா, ஓட்டிங் லிஸ்ட்

அர்ச்சனா தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அவரை தொடர்ந்து தினேஷ் அல்லது விசித்ரா ரன்னராக இருப்பார்கள் என இவ்வளவு நாள் கணிக்கப்பட்டது. உண்மையில் விசித்ரா மற்றும் தினேஷுக்கு இந்த வாரம் ஓட்டுக்களின் எண்ணிக்கை அப்படியே சரிந்து விட்டது. இந்த வாரம் அர்ச்சனாவுக்கு அடுத்து அதிக ஓட்டுக்களை பெற்றிருப்பவர் மணி தான். மணி இப்போது டாப் கியரில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்.

ஓட்டிங்கில் முன்னேறிக் கொண்டிருக்கும் மணி

டான்ஸ் மாஸ்டர் மணிச்சந்திரா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தபோது அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இல்லை. அவர் வெளியேறி விட்டால் ரவீனா விளையாட்டை தனியாக விளையாடுவார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். எப்படியோ அதிர்ஷ்டத்தில் தப்பி வந்த மணிக்கு கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்களிடையே அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இறுதிப் போட்டியில் ரன்னராக வருவார்கள் என நினைத்த விசித்ரா, தினேஷ் மற்றும் விஷ்ணுவை தாண்டி தற்போது மணிக்குத்தான் ஓட்டுகள் அதிகமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. போற போக்கை பார்த்தால் அர்ச்சனா கொஞ்சம் தவறவிட்டால் மணி டைட்டில் வின்னர் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது. ரவீனா எலிமினேஷன் ஆகி வெளிவந்த நிலையில் இப்போது அவருடைய ரசிகர்களும் மணிக்கு தான் ஓட்டு போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

Also Read:என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே.. மாயாவின் வண்டவாளத்தை எடுத்து விட்ட விஷ்ணு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்