ஜீ தமிழில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் சர்வைவர். இந்த நிகழ்ச்சி இரண்டு வாரத்தை நெருங்கிய நிலையில் சர்வைவர் நிகழ்ச்சிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சர்வைவர் நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நேரடியாக கலாய்த்துள்ளார் சர்வைவர் போட்டியாளர்.
நேற்றைய நிகழ்ச்சியில் விஜே பார்வதி தன்னை அனைவரும் ஒதுக்கி வைப்பதாகவும், எப்போதும் தனது குறையை மட்டுமே சுட்டிக்காட்டி வருவதாகவும் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அம்ஜத்கான், ‘எட்டு மணிக்கு எழுந்து ஆடுவதற்கும், மற்றவரை குறை பேசிக்கொண்டே சமைப்பதற்கும், சண்டை போட்டுக்கொண்டே பாத்திரத்தை கழுவுவதற்கும், ஏசி ரூமில் படுத்துக் கொண்டு பிறரை பற்றி காசிப் பேசுவதற்கும் ஏற்ற நிகழ்ச்சி இது அல்ல’ என்று காரசாரமாக கருத்து தெரிவித்துள்ளார் அம்ஜத்கான்.
ஒருவேளை அம்ஜத் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் நேரடியாக கேலி செய்கிறாரோ என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. அதிலும் ஒரு சிலர் இதில் சந்தேகத்திற்கு என்ன வேலை, இவர் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் கூறியிருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, அம்ஜத் கான் தனது தந்தையை பற்றிய சோகமான நிகழ்வு ஒன்றை பதிவு செய்துள்ளார். கூகுள் மேப்பை பார்த்து வண்டி ஓட்டியதாகவும் அதனை கவனித்த அவர் தந்தை அலைபேசியை பார்த்துக்கொண்டே கவனம் இல்லாமல் வண்டி ஓட்டுகிறாயே என்று கேட்டுள்ளார்.
அதற்கு அம்ஜத் கான் அவரது தந்தையை ‘நீ வந்து வண்டி ஓட்டு’ என்று எடுத்தெறிந்து பேசி உள்ளார். உடனடியாக அவர் தந்தை கோபப்பட்டு காரை விட்டு இறங்கி சென்றுவிட்டாராம். அதற்குப் பிறகு இவரது காரில் அவர் தந்தை ஏறவே இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
அப்போது விஜே பார்வதி தன்னை மட்டும் அஜ்மல் கான் விலக்கி விட்டு குரூப் ஃபார்ம் பண்ணுகிறார் என்று அம்ஜத்கானை விஜே பார்வதி வம்புக்கிழுத்து கொண்டிருக்கிறார்.