ரஜினிகாந்த் கால்சீட்டையே அலசி ஆராயும் தயாரிப்பாளர்.. பிரதீப் ரங்கநாதனை விரட்டி விட்ட பரிதாபம்

சினிமாவில் திறமை இருந்தும் ஒரு இளம் இயக்குனர் எவ்வாறு அலைக்கழிக்கப் பட்டுள்ளார் என்பதற்கு உதாரணமாக லவ் டுடே இயக்குனர் பிரதீப் உள்ளார். சமீபத்தில் இவருடைய லவ் டுடே படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்று வருகிறது.

ஆனால் இந்த வெற்றி இவருக்கு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. இந்த இடத்திற்கு வருவதற்கு பல கஷ்டங்களைத் தாண்டி, அவமானங்களை சந்தித்து தான் இன்று இந்த உயரத்தை அடைந்துள்ளார். லவ் டுடே படத்தை தயாரிப்பதற்காக பல நிறுவனங்களுக்கு ஏறி இறங்கியுள்ளார் பிரதீப்.

Also Read : கிண்டல் செய்தவரை வாழ்ந்துட்டு போ என கூப்பிட்டு பாராட்டிய ரஜினி.. கண்கலங்கிய இளம் ஹீரோ!

ஆனால் எல்லோருமே இவரை நிராகரித்துள்ளனர். குறிப்பாக லைக்கா, ஸ்டுடியோ கிரீன் போன்ற பெரிய நிறுவனங்களும் பிரதீப்பின் படத்தை தயாரிக்க முன்வரவில்லை. கடைசியாக ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பிரதீப் சென்றுள்ளார். அங்கும் இவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

ஆனால் பிரதீப்பின் லவ் டுடே கதையை ஏஜிஎஸ் நிறுவனத்தின் மகள் அர்ச்சனா படித்துள்ளார். இந்த படம் செம ஹிட்டாகும் என புரிந்து கொண்டு லவ் டுடே படத்தை தயாரிக்க ஒப்புதல் வாங்கி கொடுத்துள்ளார். அவர் நினைத்தது போலவே படம் அதிரிபுதிரி ஹிட் அடித்து வசூல் வேட்டையாடி வருகிறது.

Also Read : காம பிசாசுகளுக்கு ரூட் போட்டுக்கொடுத்த லவ் டுடே பிரதீப்.. காட்சிகளை தூக்க வேண்டுமென வலுக்கும் எதிர்ப்பு

ஒரு திறமையான இயக்குனராக இருந்தாலும் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டு தான் இந்த வெற்றியைப் பிரதீப் பெற்றுள்ளார். ஆனால் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான ரஜினி, விஜய் போன்ற நடிகர்களின் கால்சீட்டை பெரிய நிறுவனங்கள் அலசி ஆராய்ந்து வருகிறது.

டாப் நடிகர்களின் படத்தை தயாரிப்பதில் தப்பில்லை. ஆனால் சில திறமையான மற்றும் வளர நினைக்கும் இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் லவ் டுடே பிரதீப் போல பல நடிகர்கள், இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

Also Read : கெஞ்சி பட வாய்ப்பு கேட்ட வாரிசு நடிகர்.. ஒரே படத்தின் வெற்றியால் எகிறிய பிரதீப் மார்க்கெட்

Next Story

- Advertisement -