பாலச்சந்தருக்கு இணையாக ரஜினியை வளர்த்து விட்ட பிரபலம்.. மறைமுகமாக சூப்பர் ஸ்டார் செய்த காரியம்

இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் அவர்கள் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற இரு ஆளுமைகளை தமிழ் சினிமாவுக்கு தந்துள்ளார். தற்போதும் அதே நன்றியுடன் ரஜினி மற்றும் கமல் இருவரும் தனது குருவான பாலச்சந்தரை வணங்கி வருகிறார்கள்.

அதிலும் ரஜினி இயக்குனர் பாலச்சந்தரை தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறார். மேலும் சமீபத்தில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைக்கும் போது இதை தனது குரு பாலச்சந்தருக்கு அர்ப்பணிப்பதாக மேடையில் கண்கலங்கி சூப்பர் ஸ்டார் பேசியிருந்தார்.

Also Read : வயசுக்கு தகுந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் 5 நடிகர்கள்.. இன்றுவரை ரஜினியை மட்டும் ஏற்றுக்கொள்ளும் ரசிகர்கள்

பாலச்சந்தர் ரஜினிக்கு பல படங்கள் கொடுத்து சினிமாவில் வளர்த்து விட்டுள்ளார். அதேபோல் பாலச்சந்தருக்கு இணையாக மற்றொரு பிரபலம் ரஜினி வளர்த்து விடுவதில் பெரும்பங்கை ஆற்றியுள்ளார். அவர் சிவாஜி காலத்தில் இருந்தே பல படங்களை தயாரித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். அதாவது பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தில் காமெடி ரோலில் பின்னி பெடல் எடுத்திருக்கும் கலைஞானம் தான் அவர். கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் இவர் திரைக்கதை எழுதி உள்ளார்.

Also Read : தன்னை கலாய்த்தவரை வீட்டுக்கு கூப்பிட்டு பாராட்டிய சூப்பர் ஸ்டார்.. பெரிய மனுஷனாக நடந்து கொண்ட ரஜினி

மேலும் 18 படங்களை கலைஞானம் தயாரித்துள்ளார். இவர் தான் ரஜினியை முதன் முதலாக தனியாக ஹீரோ ரோல் பண்ண வைத்தவர். அதாவது ரஜினி ஹீரோவாக நடித்த பைரவி படத்தை கலைஞானம் தான் தயாரித்திருந்தார். அதுமட்டுமின்றி ஆறு புஷ்பங்கள், அல்லி தர்பார் போன்ற ரஜினியின் படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இவ்வாறு ரஜினியை சினிமாவில் கலைஞானம் தூக்கி விட்டுள்ளார். இந்நிலையில் ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றவுடன் நன்றி மறவாமல் அவருக்கு உதவி உள்ளார். அதாவது கலைஞானம் நலிவுற்று கஷ்டப்பட்ட நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக ஒரு வீடு வாங்கி கொடுத்து ரஜினி உதவி உள்ளார்.

Also Read : ரஜினிக்கு வந்த கூட்டத்தில் 50% கூட கே.ஜி.எஃப், பாகுபலிக்கு வரல.. என்ன படம் தெரியுமா?

Next Story

- Advertisement -