இந்த வாரம் பிக் பாஸில் என்ட்ரி தர போகும் பிரபலம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 90 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சின்னத்திரை நடிகை ரக்ஷிதா வெளியேறி உள்ளார். இப்போது விக்ரமன், அசீம், ஷிவின், அமுதவாணன், மைனா நந்தினி, கதிரவன் மற்றும் ஏடிகே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்க இன்னும் ஓரிரு வாரங்களில் உள்ளது. ஆகையால் இப்போது டாஸ்க்குகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வார முடிவில் டபுள் எவிக்ஷன் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் பிக் பாஸில் பிரபலம் ஒருவர் என்ட்ரி தர உள்ளார்.

Also Read : பிக் பாஸ் 6-ன் நியாயம் இல்லாத 5 எலிமினேஷன்.. இப்போது வரை கொந்தளிக்கும் தனலட்சுமி ஆர்மி

இதனால் பிக் பாஸ் வீடு அனல் பறக்க போகிறது. அதாவது எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை உற்சாகப்படுத்த வருவார்கள். இந்த வாரம் கடந்த சீசன்களில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் வர உள்ளனர்.

அது யார் என்பது வரும் வாரங்களில் தெரியவரும். அதிகமாக வனிதா, தாமரை போன்ற பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த போட்டியாளர்களுக்கு வெளியில் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த கணிப்பின் மூலம் ஆட்டத்தை சாதுரியமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 பைனலுக்கு செல்லும் முதல் போட்டியாளர்.. திட்டம் போட்டு காயை நகர்த்திய விஜய் டிவி

அதுமட்டுமின்றி அமுதவாணன் டிக்கெட் டு பின்னாலே டாஸ்கின் மூலம் ஃபைனலிஸ்டாக தேர்வாகியுள்ளார். இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து யார் பைனலுக்கு செல்ல உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க்கும் வைக்கப்படும்.

ஆகையால் பணத்துடன் யார் வெளியேறுவார் என்றும் ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. மேலும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் பிரபலங்கள் கூறும் கருதினால் கதிரவன் அல்லது மைனா நந்தினி பணப்பெட்டியை எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : டிரெய்லரை வைத்து வசூலில் ஆட்டிப்படைக்க போகும் துணிவு.. அஜித்துக்கு முழு டான்ஸரான பிக் பாஸ் பிரபலம்

- Advertisement -