அடுத்த லூசிஃபர் ரஜினிதான்.. கதை ரெடியாக வைத்து காத்திருக்கும் பிரபலம்

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியாகி உள்ளது. ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிப்பதைக் காட்டிலும் இயக்கம், தயாரிப்பு என அதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தன்னுடைய கடுவா படத்திற்காக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பிரித்விராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தை பார்த்து விட்டு ரஜினி பாராட்டியதாக கூறியுள்ளார்.

மேலும், பிரித்திவிராஜ் இடம் தனக்கு ஒரு கதையை ரெடி பண்ணுமாறு ரஜினி கூறியுள்ளதாக தெரிவித்தார். நான் உடனே பயந்து விட்டேன் என பிரித்விராஜ் கூறியுள்ளார். ஏனென்றால் நான் ரஜினியின் தீவிர ரசிகன். இதனால் எதையும் சொதப்பி விடக்கூடாது என்று பயம் எனக்கு இருந்தது.

கண்டிப்பாக எனக்கு அந்த கதை மீது நம்பிக்கை இருந்தால் ரஜினி சாரிடம் சென்று இரண்டு மணி நேரம் கேட்ட அந்த கதையை சொல்லுவேன் என பிரித்விராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் தற்போதும் ரஜினியின் பாட்ஷா படத்தின் சில காட்சிகள் பார்த்து கொண்டிருந்தால் ஷூட்டிங்குக்கு கூப்பிட்டாலும் அதைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன்.

அந்த அளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகன் என பிரித்விராஜ் கூறியுள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் பிருத்விராஜ் கூட்டணியில் கண்டிப்பாக விரைவில் ஒரு படம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். மேலும் விரைவில் அதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என பிரித்விராஜ் கூறியுள்ளார்.

Next Story

- Advertisement -