விஜய்க்கு நாடாளும் தகுதி கிடையாது.. புது சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

Actor Vijay: இப்போது எங்கு திரும்பினாலும் விஜய்யின் அரசியல் நகர்வு குறித்த பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் சமீப காலமாக அவரின் நடவடிக்கைகளும் அரசியல் வருகைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

அந்த வகையில் எப்போது வேண்டுமானாலும் அவர் கட்சியை தொடங்கலாம் என்ற நிலையும் இருக்கிறது. இந்த சூழலில் வலைப்பேச்சு பிரபலமான பிஸ்மி விஜய்க்கு நாடாளும் தகுதி கிடையாது என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Also read: நாளை அடுத்த சம்பவத்தை செய்யப்போகும் விஜய்.. அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்

அவர் கூறியிருப்பதாவது, நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கான உரிமை இருக்கிறது. ஆனால் தகுதி இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. ஜனநாயக உரிமை படி யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அதற்கான தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

ஏனென்றால் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்கு முதலில் சமுதாயத்தில் இருக்கும் இன்றைய நிலவரங்களை அவர்கள் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக தற்போது நிகழும் பிரச்சனைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Also read: லியோ மோடுக்கு மாறிய பிக்பாஸ் ஜனனி.. காஷ்மீரில் இருந்து வெளியான குளுகுளு போட்டோ

இப்போது உள்ள நடிகர்களுக்கு நம்ம ஊரில் அரிசி ஒரு கிலோ என்ன விலை விற்கிறது என்று கேட்டால் நிச்சயம் தெரியாது. அப்படி இருக்கும்போது அவர்களால் எப்படி அரசியலுக்கு வர முடியும், எப்படி நம்மை ஆள முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விஜய் சினிமாவை ஒதுக்கிவிட்டு அரசியலுக்கு வரும் வாய்ப்பு குறைவு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் தளபதி 68 படத்திற்காக அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் போது அவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் வேறு ஏதோ கணக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் விஜய் குறித்த பல விஷயங்களை கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி வரும் பிஸ்மி இதன் மூலம் அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்.

Also read: சர்வதேச அளவில் மிரட்டப் போகும் 3 இயக்குனர்கள்.. மொத்த கண்ட்ரோலையும் குத்தகைக்கு எடுத்த லோகேஷ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்