நாளை அடுத்த சம்பவத்தை செய்யப்போகும் விஜய்.. அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்

விஜய் நடிப்பில் வரும் ஆயுத பூஜை அன்று ரிலீஸ் ஆகும் லியோ படத்தை விட இப்போது அவருடைய அரசியல் பிரவேசத்தை பற்றிய தகவல்தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமிக்கிறது. அதிலும் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கி போட்டி போடுவதற்கான அத்துணை வேலைகளையும் பார்த்து வருகிறார்.

இதற்காக பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனைக் கூட்டத்தை சில தினங்களுக்கு முன்பு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இப்போது அவர் ‘தளபதி விஜய் பயிலகம்’ என்ற புதிய திட்டத்தை தமிழகத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் துவங்க இருக்கிறார். அதனைத் தொடங்கும் தேதியையும் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உறுதி செய்துள்ளார்.

Also Read: வாரிசை விட 5 மடங்கு வியாபாரம்.. வியக்க வைக்கும் லியோ ஓவர்சீஸ் விவரம்

தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் மன்ற சார்பில் துவங்கப்படும் இந்த பாடசாலையை கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதியான நாளை துவங்க முடிவு செய்துள்ளனர்.

நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தளபதி விஜய்யின் சார்பில் பயிலகத்தை துவங்கி இரவு நேர பாடசாலையாக அவை செயல்பட போகிறது.  இதற்காக ஒரு ஆசிரியரையும் அவர்கள் நியமிக்க உள்ளனர்.

Also Read: லியோ மோடுக்கு மாறிய பிக்பாஸ் ஜனனி.. காஷ்மீரில் இருந்து வெளியான குளுகுளு போட்டோ

இந்த பாடசாலையை பள்ளி செல்ல முடியாத ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய் ஏற்கனவே ஒவ்வொரு தொகுதியிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தகையையும் பரிசு பொருள்களையும் வழங்கி கௌரவித்தார்.

அதன் தொடர்ச்சியாக இப்போது மீண்டும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் தளபதி விஜய் பயிலகம் என்ற பாடசாலையையும் துவங்கி புதிய வாக்காளர்களை தன் வசப்படுத்துகிறார். இதனால் படிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விஜய், அரசியலுக்கு வருவது பாராட்டுக்குரிய விஷயம் தான் என பலரும் அவருடைய அடுத்தடுத்த திட்டத்தை வரவேற்கின்றனர்.

விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு

vijay-announcement
vijay-announcement-cinemapettai

Also Read: 10 வருடத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டாருக்கு நடந்த அதே சம்பவம்.. இப்போது பனையூரிலும் விஜய்க்கு நிகழ்ந்திருக்கிறது

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்