ஒட்டுமொத்த சரக்கு தீர்ந்துடுச்சு.. ஆபீஸ் பக்கமே வந்துவிடாத, இயக்குனரை விரட்டியடித்த பாஸ் நடிகர்

தொடர்ந்து டாப் நடிகரின் படத்தை இயக்கிக் கொண்டிருந்த இயக்குனர் ஒருவர், அடுத்ததாக பாஸ் நடிகருக்கு வலை விழித்திருந்தார். இதனால் படத்தின் ஒரு சில காட்சிகளை மட்டுமே காண்பித்து பாராட்டி பெற்றார் அந்தக் கருத்து சொல்லும் இயக்குனர்.

ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிப்போச்சு. முதலில் சின்ன பட்ஜெட்டில் சிறந்த இயக்குனராக தெரிந்த இவர், தற்போது ஒரே நடிகரை வைத்து குண்டு சட்டிக்குள்ளியே குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவரிடம் சரக்கு தீர்ந்து போய்விட்டது என்றும் உதவி இயக்குனர்களை கிண்டல் செய்கின்றனர்.

Also Read: மாஸ் ஹீரோவின் வீட்டுக்கு அருகில் குடிபோன நம்பர் நடிகை.. மீண்டும் துளிர்விட்ட அந்தரங்க நெருக்கம்

இதனால் அடுத்ததாக பாஸ் நடிகருக்கு போட்ட சோப்பு வொர்க் அவுட் ஆகி அவருடைய படத்தை புதிதாக இயக்க இருந்தார். ஆனால் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான படம் ஒரே மாதிரியான கதைக்களத்தையே ரிப்பீட் செய்வதால் பாஸ் நடிகர் சுதாரித்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

தம்பி! படத்தை நல்ல கருத்தா தான் எடுக்கிற, ஆனா லாஜிக் சுத்தமா ஒர்க் அவுட் ஆகல! என்று மூஞ்சியில் அடித்தார் போல் அந்த கருந்து கந்தசாமியிடம் பாஸ் நடிகர் கூறி இருக்கிறார். இதன்பின் இயக்குநரை ஆபீஸ் பக்கமே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

Also Read: வளரும்போது இவ்வளவு ஆட்டமா.. மாஸ் ஹீரோவின் கள்ளக்காதலை பிரிச்சு விட்ட இயக்குனர்

எப்படியாவது சமாதானப்படுத்த நினைத்த கருத்து கந்தசாமி, போன் மூலம் பாஸ் நடிகரை தொடர்பு கொண்டாலும் பிஸியாக இருக்கிறேன் என்று சொல்லி விடுகிறாராம். இருப்பினும் எப்படியோ அந்தக் கருத்து கந்தசாமி ஒரு வழியாக, தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் ஹீரோவிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டாராம்.

- Advertisement -