Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
மாஸ் ஹீரோவின் வீட்டுக்கு அருகில் குடிபோன நம்பர் நடிகை.. மீண்டும் துளிர்விட்ட அந்தரங்க நெருக்கம்
மாஸ் ஹீரோவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நடிகை ஒருவர் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய பழக்கத்தை புதுப்பித்துள்ளாராம். பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை இப்போது மீண்டும் தன்னுடைய ரீ என்ட்ரியை அட்டகாசமாக தொடங்கி இருக்கிறார்.
இடையில் சில காலம் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த நடிகை சமீபத்தில் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனால் மீண்டும் முன்னணி இடத்திற்கு வந்துள்ள நடிகையை பற்றிய பேச்சு தான் இப்போது அதிகமாகி இருக்கிறது.
Also read: அந்தரங்க மோகத்தில் இருந்த ஹீரோ, தூது போன தயாரிப்பாளர்.. கண்டபடி திட்டி அனுப்பிய கேவலம்
அதாவது நடிகை நடிக்க வந்த புதிதில் மாஸ் ஹீரோ ஒருவருடன் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். அதன் காரணமாகவே அந்த ஜோடியின் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. அதனாலேயே அவர்கள் இருவருக்கும் இடையே சம்திங் சம்திங் என்ற ரீதியில் பல செய்திகள் வெளிவந்தது. அதன் பிறகு புது நடிகைகளின் வரவால் இந்த நடிகை ஓரம் கட்டப்பட்டார்.
அந்த ஹீரோவும் இவரை கண்டு கொள்ளாமல் இருந்தார். ஆனால் இப்போது நடிகை ஹீரோவுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறாராம். அதற்கு முக்கிய காரணம் இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருப்பது தான். அதனால் இவர்களைப் பற்றி இதற்கு முன்னால் வெளிவந்த வதந்திகள் தற்போது மீண்டும் அடிபட ஆரம்பித்துள்ளது.
Also read: எக்கச்சக்க அட்ஜஸ்ட்மென்ட்.. பட வாய்ப்புக்காக இளம் நடிகருக்கு சீரியல் நடிகை கொடுத்த நைட் பார்ட்டி
அதற்கு ஏற்றார் போல் நடிகையும் தன்னுடைய ஜாகையை நடிகரின் வீட்டுக்கு அருகிலேயே மாற்றி விட்டாராம். அதாவது நடிகை பல கோடி மதிப்புள்ள பங்களாவை வாங்கி அதில் குடியேறி இருக்கிறாராம். அதுவும் நடிகர் வசிக்கும் வீட்டுக்கு மிக அருகிலேயே அவரும் குடி வந்திருப்பது பல ரீதியில் பேசப்பட்டு வருகிறது. மேலும்இதன் மூலம் நடிகை தன்னுடைய பழைய பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்து இருப்பதாகவும் காத்துவாக்கில் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
