சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

புகழின் உச்சத்தை ருசித்த 2 நடிகைகள் சந்தித்த மிகப்பெரிய தோல்வி.. அசிங்கப்பட்டு உயிரையே விட்ட ஜெமினியின் மனைவி

Two Actress Faced Big Problems: சினிமாவைப் பொறுத்தவரை சில விஷயங்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு தலைமுறைக்கும் பேசப்பட்டு வருகிறது. முக்கியமாக சில நபர்களை நாம் மறக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவர்களுடைய சரித்திரம் நின்னு பேசும். அந்த மாதிரி நபர்கள் சினிமாவில் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை பற்றி தற்போது ஒரு தொகுப்பாக நாம் பார்க்கலாம்.

தென் இந்தியாவின் முதல் நடிகை, முதல் பெண் இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், பாடகி, இசையமைப்பாளர் போன்ற அனைத்தையும் செய்து காட்டிய நடிகை தான் டிபி ராஜலக்ஷ்மி. இவரை சினிமா ராணி என்று கூட செல்லமாக கூப்பிடுவார்கள். அப்படிப்பட்ட இவர் மிஸ் கமலா என்ற ஒரு படத்தை எடுத்தார். அதில் இவரே நடிகையாகவும் நடித்தார்.

Also read: ஜெமினி கணேசனை காதல் வசப்படுத்திய 4 பெண்கள்.. 78 வயதில் நடந்த நான்காவது திருமணம்

இதனை தொடர்ந்து கலைமாமணி போன்ற பல உயரிய விருதுகளை பெற்றார். அத்துடன் தென்னிந்தியாவின் முதல் பேசும் படம் காளிதாஸ் படத்தின் நாயகியாக நடித்தார். இப்படி இவரைப் பற்றி பல நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட இவர் சமூக ரீதியாக குரல் கொடுத்து வந்தார். அந்த வகையில் இவரிடம் இருந்த சொத்துக்கள் அனைத்தும் இழந்து வாடகை வீட்டில் குடியேறினார்.

அதன் பின் இவரால் வாடகை பணம் கூட கொடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தார். அந்த நேரத்தில் இவர் வாங்கிய பதக்கங்கள் மற்றும் விருதுகள் அனைத்தையும் விற்றார். அதன் பின் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு குணப்படுத்த முடியாமல் வறுமையின் பிடியில் கடைசியில் உயிரை விட்டார்.

Also read: காதல் மன்னனின் நிறைவேறாத ஆசை.. கனவுக்கு உயிர் கொடுத்த ஜெமினியின் குடும்பம்

இவரை போல தான் நடிகை சாவித்திரி நிலைமையும் பரிதாபமாக போனது. அதாவது நடிகையாக பிரபலமான நிலையில் குழந்தை உள்ளம் மற்றும் பிரபாத்தம் என்ற இரு படங்களை தயாரித்தார். இவர் தயாரிக்கும் போது பிரபலங்கள் இந்த படத்தை எடுக்க வேண்டாம். அதையும் மீறி எடுத்தால் தோல்வி அடையும் என்று எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் யார் பேச்சையும் கேட்காமல் படத்தை எடுத்தார். கடைசியில் அவர்கள் சொன்ன மாதிரி பெரும் நஷ்டத்தை இவருக்கு ஏற்படுத்தியது.

இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இவருடைய கணவர் ஜெமினி கணேசனிடம் இருந்து விவாகரத்தை பெற்றார். பின்பு விரக்தியானதால் மதுவுக்கு அடிமையானார். அப்போது இவரிடம் இருந்த பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டது. இதனால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட 19 மாதங்கள் கோமாவில் படித்த படுக்கையாக இருந்தார். பின்பு சிகிச்சை பலனின்றி இவருடைய 46 வது வயதில் மரணம் அடைந்து விட்டார். இப்படி இரண்டு நடிகைகள் புகழின் உச்சிக்கு சென்ற பிறகு போராத காலத்தால் மிகவும் கஷ்டப்பட்டு உயிரை விட்டிருக்கிறார்கள்.

Also read: ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு பெண் வேடத்தில் நடித்த 5 நடிகர்கள்.. ஜெமினியை காதலிக்க தூண்டிய சண்முகி

- Advertisement -

Trending News