உண்மையை போட்டு உடைத்த கண்ணம்மா.. கதி கலங்கி போய் நிற்கும் பாரதி குடும்பம்

விஜய் டிவியில் பிரேம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் தற்போது வெண்பா ரோஹித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாரதிக்காக தான் வெண்பா குழந்தையை சுமக்க சம்மதித்தார். தற்போது பாரதி தனக்கு கிடைக்க மாட்டார் என்பது உறுதியானதால் குழந்தையை கலைக்க வெண்பா திட்டமிட்டு உள்ளார்.

மறுபுறம் ஹேமா பாரதியின் செயல்பாடுகளை கண்டு மிகுந்த மன வேதனையில் உள்ளார். அப்போது கண்ணம்மா மற்றும் லட்சுமி இதுவரையும் தனது வீட்டுக்கு வருமாறு ஹேமா போன் செய்து கூப்பிடுகிறார். பாரதியின் வீட்டுக்கு வந்த கண்ணம்மா என்ன விஷயம் என்று ஹேமா இடம் கேட்கிறார்.

Also Read :புது மாப்பிள்ளை சோக்குக்கு திரிந்த கோபி.. கடைசியில் ஆப்பு வைத்த செழியன்

அப்போது என்ன சொந்த புள்ள மாதிரி பார்த்துக்கிறேன்னு சொன்ன அப்பா இப்ப ஏதேதோ செஞ்சுகிட்டு இருக்காரு. வீட்ல இருக்கவே எனக்கு புடிக்கல. என்ன அனாத ஆசிரமத்தில் இருந்து தானே தூக்கிட்டு வந்தாங்க. நான் அங்கேயே போயிடுறேன் சமையல் அம்மா என ஹேமா பெட்டி படுக்கையுடன் வந்து நிற்கிறார்.

இதை பார்த்த உடைந்து போன கண்ணம்மா உண்மையைச் சொல்ல போர்படுகிறார். இப்போது சௌந்தர்யா கண்ணம்மாவை தடுத்து நிறுத்துகிறார். இதற்கு மேலையும் பொறுக்க முடியாது என பொங்கி எழுந்த கண்ணம்மா உண்மையை ஹேமாவிடம் போட்டு உடைக்கிறார்.

Also Read :விஜய் டிவியால் சாவின் விளிம்பிற்கு செல்லும் காமெடி நடிகர்கள்.. செஞ்சாலும் குத்தம் செயலானாலும் குத்தமா!

நீ ஒன்னும் அனாதை இல்ல, இத்தனை நாள் சமையல் அம்மா, சமையல் அம்மா என்று கூப்பிட்டியே, நான் தான் உன்னோட நிஜ அம்மா என்ற ஹேமாவிடம் கண்ணம்மா கூறுகிறார். இதைக் கேட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் ஹேமா அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் பாரதி குடும்பம் மொத்தமும் கதி கலங்கி இருக்கிறது. பாரதி இதற்கு என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்குள்ளாகவே டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்து லட்சுமி, ஹேமா இருவருமே பாரதியின் குழந்தை தான் என்பது அவருக்குத் தெரிய வர உள்ளது.

Also Read :வெண்பா கழுத்திற்கு வந்த அருவாள்.. மௌனராகம் கதை போல பாரதிகண்ணம்மாவில் நடந்த ட்விஸ்ட்

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -