விக்ரமனை டார்கெட் செய்த பஜாரிகள்.. டிஆர்பிக்காக நடந்த சண்டை, ஆரிக்கு பின் பெருகும் ஆதரவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய விளையாட்டை தனித்தன்மையுடன் விளையாடி வரும் போட்டியாளர்களில் ஒருவர் தான் விக்ரமன். பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் நடந்தாலும் முதல் ஆளாக ஆதரவு குரலும், கேள்வியும் கேட்கக்கூடிய நபரும் இவர்தான்.

அதனாலேயே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பலருக்கும் இவரை பிடிக்காது. அதை சிலர் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் வெளிப்படையாகவே காட்டி தங்கள் வன்மத்தை தீர்த்துக் கொள்கின்றனர். அதில் மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி இருவரும் விக்கிரமனை வேண்டுமென்றே சீண்டி பார்ப்பது ரசிகர்களை எரிச்சல்படுத்தி வருகிறது.

Also read:பிக்பாஸில் சவுண்டு சரோஜாவாக மாறிய நடிகை.. தர லோக்கலாக மாறிய பிக்பாஸ் வீடு

நேற்றைய நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் விக்ரமனை மைனா நந்தினி சரமாரியாக கேள்வி எழுப்பி சண்டைக்கு சென்றார். தற்போது டிவி சேனல்களாக மாறியிருக்கும் பிக் பாஸ் வீட்டில் மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் இணைந்து ஒரு டீமாக இருக்கின்றனர். விக்ரமன், ரட்சிதா உள்ளிட்டோர் எதிரணியாக இருக்கின்றனர்.

இதில் மகேஸ்வரி ஏடிகே ஒரு டீமுக்கு நடுவர்களாகவும், விக்ரமன், ரட்சிதா ஆகியோர் எதிரணிக்கு நடுவர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். அப்போது நடைபெற்ற ஒரு டாஸ்க்கில் விக்ரமன் தன்னுடைய மதிப்பெண்களையும், அதற்கான விளக்கத்தையும் கூறினார். தங்கள் அணிக்கு மார்க் குறைந்துவிட்டது என்ற கடுப்பில் மைனா நந்தினி தேவையில்லாத வார்த்தைகளை பேசினார்.

Also read:பிக்பாஸ் போய் பத்து பைசா பிரயோஜனம் இல்ல.. அது ஒரு பித்தலாட்டம் எனக் கூறி பப்ளிசிட்டி தேடும் நடிகர்

விக்ரமன் அதை அமைதியாக எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனாலும் விடாத மைனா நந்தினி அவரைப் பார்த்து நக்கலாக சிரித்து கமெண்ட் கொடுத்தார். இதனால் கொந்தளித்த விக்ரமன் பதிலுக்கு அவருடன் விவாதம் செய்தார். இப்படியாக நடந்த சண்டையில் மகேஸ்வரியும் தன் பங்குக்கு விக்ரமனை நக்கல் செய்யும் விதமாக பேசியது பார்க்கும் அனைவருக்குமே சற்று ஓவராக தெரிந்தது. அந்த வகையில் நேற்று இருவருமே பஜாரி ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் எந்த பிரச்சனை தனக்கு எதிராக வந்தாலும் அதை அமைதியாகவே கையாண்டு வரும் விக்ரமன் சில நேரங்களில் அதை தாங்காமல் வெடிக்கவும் செய்கிறார். இதை பார்க்கும் போது கடந்த சீசனில் ஆரியை அன்பு குரூப் அதாவது அர்ச்சனாவின் டீம் பழிவாங்கும் விதமாக நடந்து கொண்டது தான் நினைவுக்கு வருகிறது. அந்த வகையில் அப்போது ஆரிக்கு கிடைத்த ஆதரவை போன்றே இப்போது விக்ரமனுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

Also read:17 வயதிலேயே திருமணம், ஏகப்பட்ட லவ் பிரேக்கப்.. பிக்பாஸ் நடிகையைப் பற்றி புட்டு புட்டு வைத்த முன்னாள் காதலன்

- Advertisement -