சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பாண்டியனுக்கு சம்மந்தியாக வரப்போகும் பஜாரி குடும்பம்.. சரவணனை ஆட்டிப்படைக்க போகும் மயிலு

Pandian stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் பாண்டியன், குடும்பத்தில் இருப்பவர்களை வரச் சொல்லி சாமியே உத்தரவு கொடுத்து விட்டது.

கல்யாண வைபோகத்தில் பார்த்த அந்த சம்பந்தம் சரவணனுக்கு ஏற்ற மாதிரி அமையும் என்று கூறுகிறார்.

அது மட்டுமில்லாமல் அந்த குடும்பத்தையும் பெண்ணையும் ஆஹோ ஓஹோ எனப் புகழ்ந்து கொண்டே போகிறார்.

இதைக் கேட்ட மீனா, அந்த குடும்பத்தை பற்றி கொஞ்சமாவது பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரித்து கொள்ளலாம் என்று கூறுகிறார்.

ஆனால் பாண்டியன், கல்யாண வைபோகத்தில் அவர்களை பார்த்ததுமே தெரிந்து விட்டது.

அந்த மாதிரி ஒரு அமைதியான குடும்பத்தை பார்க்க முடியாது என்று சொல்லி பண்பு பணிவு எல்லாமே இருக்கிறது என்று கூறுகிறார்.

இவர் இப்படி குடும்பத்தில் இருப்பவர்களிடம் பாராட்டி பேசிக் கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் குடும்பத்தை காட்டுகிறார்கள். அவர்களை பார்க்கும் பொழுது தர லோக்கலாக பக்கத்தில் இருப்பவரிடம் அடிதடியில் இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.

அதிலும் தங்க மயிலு வாய் திறந்தால் அனைவரும் பயத்தில் ஒதுங்கும் அளவிற்கு பஜாரி போல் தான் நடந்து கொள்கிறார். இது தெரியாமல் பாண்டியன், தங்கமயில் அப்பாவிற்கு ஃபோன் பண்ணி குடும்பத்துடன் பெண் பார்க்க வீட்டிற்கு வருகிறோம் என்று சொல்லிவிட்டார்.

உண்மையை மறைக்கும் தங்க மயிலு

உடனே பெண் விட்டார்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் தங்கமயிலுக்கு மாப்பிள்ளை வீட்டு குடும்பத்தார்கள் வருகிறார்கள் என்று தெரிந்ததும் முகமே மாறிவிட்டது.

அந்த வகையில் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இவருக்கு ஏதோ பிளாஷ்பேக் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை மறைத்து தான் சரவணனுக்கு மனைவியாக போகப் போகிறார்.

பாண்டியன் குடும்பத்தில் இதுவரை இருப்பவர்களால் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. முக்கியமாக காதல் கல்யாணமாக பண்ணிட்டு வந்த இரண்டு மருமகள்களும் குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நடந்து வருகிறார்கள்.

ஆனால் பாண்டியன் பார்த்து வைத்து மகனுக்கு நடக்கப் போகும் திருமணத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தில் உள்ளவர்களின் நிலைமையும் தலைகீழாக மாறப் போகிறது.

- Advertisement -

Trending News