ராமர் சோலியை முடித்து அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் பிரபாஸ்.. ப்ராஜெக்ட் கே-ல் எடுக்க போகும் அவதாரம்

Actor Prabhas: பாகுபலி நாயகனான பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் ஆதிபுருஷ் படம் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் ராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. அதனாலேயே இப்படத்திற்கான ஆர்வமும் பெரிதாக இருந்தது.

ஆனால் டீசர் மற்றும் ட்ரெய்லரை பார்த்த பலரும் இப்படத்தை கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். இருந்தாலும் பட குழு வித்தியாசமான பிரமோஷன்களை செய்து படத்தை வெளியிட்டது. ஆனால் ஏற்கனவே சல்லி சல்லியாக நொறுங்கிப் போன இப்படம் ரிலீசுக்கு பிறகு மேலும் கலாய்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போட்ட காசை எடுக்க முடியாமல் படக்குழுவும் திணறியது.

Also read: யாரும் தேவையில்லை என்று டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்த 7 இயக்குனர்.. பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த உலக நாயகன்

இது ஒரு புறம் இருந்தாலும் பிரபாஸ் உடனே அடுத்ததாக தன்னுடைய ப்ராஜெக்ட் கே படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். ஆதிபுருஷ் படத்தால் நொந்து போயிருந்த மனதுக்கு இந்த அறிவிப்பு மூலம் அவர் மருந்து போட்டுக் கொண்டார். மேலும் உலகநாயகனும் இப்படத்தில் நடிக்க இருப்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பாக அமைந்தது.

அந்த வகையில் தற்போது பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தை மறந்து விட்டு ரசிகர்கள் ப்ராஜெக்ட் கே பற்றி சலசலக்க ஆரம்பித்துள்ளனர். இந்த சூழலில் தற்போது வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களை ஜெர்க் ஆக வைத்துள்ளது. என்னவென்றால் ப்ராஜெக்ட் கே படத்தில் பிரபாஸ் விஷ்ணு பகவானாக நடிக்க இருக்கிறாராம்.

Also read: Adipurush Movie Story Review- இதைத்தான் இத்தனை நாளா உருட்டிகிட்டு இருந்தீங்களா.? ஆதி புருஷ்ஷா இல்ல பீதி புருஷ்ஷா.. முழு விமர்சனம்

அந்த வகையில் கே என்ற எழுத்து கல்கி என்ற பெயரை தான் குறிக்கிறதாம். விஷ்ணு பகவானின் 10வது அவதாரமாக இருக்கும் இந்த கல்கி அவதாரத்தில் தான் பிரபாஸ் நடிக்க இருக்கிறார். அதிலும் இது நவீன அவதாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் ஆதிபுருஷ் மூலம் ராமரின் சோலியை முடித்துவிட்டு அடுத்ததாக விஷ்ணு பக்கம் திரும்பி இருக்கிறார் இந்த பாகுபலி நாயகன். இது என்னென்ன சர்ச்சைகளை சந்திக்கும் என்று தான் தெரியவில்லை.

Also read: போட்டி போட்டு பட்ஜெட் போடும் 2 பிரம்மாண்ட படங்கள்.. கமலால் பிச்சிக்கிட்டு போன வியாபாரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்