எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஜென்டில்மேனாக வாழ்ந்த 5 நடிகர்கள்.. சிவக்குமாருக்கு முன்னோடியான ஆக்டர் 

சினிமா துறையை பொறுத்த வரையிலும் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்கி வருவது என்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால் ஒரு சில நடிகர்கள் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் சினிமா துறையில் ஜென்டில்மேன் ஆகவே வாழ்ந்துள்ளனர். அப்படியாக இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்த 5 ஜென்டில்மேன் நடிகர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

எம் என் நம்பியார்: சினிமாவில் அதிக அளவில் தனது படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் எம் என் நம்பியார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 1000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்துள்ளார். அதிலும் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்ற ஜாம்பவான்களுடன் அதிக படங்களில் வில்லன் கேரக்டர்களில் மட்டுமே நடித்து புகழ்பெற்றுள்ளார். மேலும் இவர் வில்லன் கதாபாத்திரத்தையும் தாண்டி குணச்சித்திரம், காமெடி என  அனைத்திலும் பட்டையை கிளப்பி இருப்பார். இப்படி பல சூப்பர் ஹிட் படங்களில் வில்லனாக மிரட்டிய நம்பியார் கடைசி வரை சினிமாவில் ஜென்டில்மேன் ஆகவே வாழ்ந்து மறைந்தவர் ஆவார். 

Also Read: நம்பியார் நடிப்பில் மறக்கமுடியாத 5 படங்கள்.. எம்ஜிஆருக்கு நிகரான வில்லன் இவர்தான்

ஜெய்சங்கர்: பெரும்பாலும் தனது படங்களில் போலீஸ் மற்றும் துப்பறிவாளனாக நடித்து தென்னிந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் ஆக வலம் வந்தவர் தான் நடிகர் ஜெய்சங்கர். தமிழில் இரவும் பகலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிட்டதட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். அதிலும் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருக்கு இணையாக சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றிருந்தார். அதன் பிறகு வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இப்படி சினிமாவில் பிரபலமாக இருந்த இவர் இறுதிவரை எந்தவித கிசுகிசுப்பிலும்  சிக்காமல் ஜென்டில்மேன் ஆகவே வாழ்ந்தார்.

சிவக்குமார்: தமிழில் எஸ் எஸ் ராஜேந்திரனுடன் காக்கும் கரங்கள் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் சிவகுமார். இதனைத் தொடர்ந்து சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகராக வலம் வந்தார். அதிலும் மூன்று தலைமுறை நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல ஹிட் சீரியல்களில் நடித்திருந்தார். அதிலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்ததற்காக பல்வேறு பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் கெத்து குறையாமல் வாழ்ந்து வரும் சிவக்குமார் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஜென்டில்மேன் ஆகவே வாழ்ந்து வருகிறார்.

Also Read: ஜெய்சங்கர் போலவே எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஒரே ஹீரோ.. மக்களை கவர்ந்த நாயகன்!

டி ராஜேந்தர்: தமிழ் சினிமாவில் பாடகர், தயாரிப்பாளர், நடிகர், இசைக்கலைஞர் என பன்முகத் திறமைகளை கொண்டு திகழ்ந்து வருபவர் தான் டி ராஜேந்தர். அதிலும் தனது படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவதின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராகவே வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் காதலை மையமாக வைத்து பல சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். மேலும் உணர்வுபூர்வமான காட்சி மற்றும் ரைமிங்கில் சொல்லி அடிக்கும் வசனங்கள் என அனைத்தும் இவரது படங்களில் அல்டிமேட் ஆக இருக்கும். இப்படி சினிமாவில் மாஸ் காட்டி வரும் இவர் இதுவரை எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் கெத்தாக வாழ்ந்து வருகிறார். 

பிரசாந்த்: சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த். அதனைத் தொடர்ந்து செம்பருத்தி, ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், வின்னர், பூமகள் ஊர்வலம் என பல ஹிட் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் வாரிசு நடிகராக அறிமுகமான இவர் அதிக அளவில் பெண் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாகவே வலம் வந்தார். இப்படி தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் இதுவரை எந்த ஒரு கிசுகிசுப்பிலும் சிக்காமல் ஜென்டில்மேன் என்று நிரூபித்துள்ளார்.

Also Read: நடிக்காமலேயே 5 தலைமுறைக்கு சேர்த்து வைத்த பிரசாந்த்.. வியக்க வைக்கும் சொத்து விவரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்