தனுஷ் போல் நடிப்பில் ஆட்சி செய்யும் நடிகை.. வேட்டையன் படத்துக்கு பின் கதவை தட்டிய வாய்ப்பு

The actress acting like Dhanush: சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில ஹீரோக்களை பார்க்கும் பொழுது மட்டும் தான் அவர்களுடைய டெடிகேஷன் ஆன நடிப்பை உணர முடியும். அந்த வகையில் ஒன்றோடு ஒன்று ஊறி நடிப்பு அசுரனாக பெயர் எடுத்து வித்தியாசமான படங்களை கொடுப்பவர் தான் தனுஷ். தற்போது அண்மைக்காலமாக இவரைப் போலவே நடிப்பில் ஆட்சி செய்த நடிகை ஒருவர் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறார்.

அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் துணிச்சலாகவும், சற்று வித்தியாசமான கேரக்டராகவும் தான் இருந்து வருகிறது. அதிலும் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தால் மட்டும் தான் அந்தப் படத்தில் கமிட் ஆகி நடிக்கிறார். இவருடைய நடிப்பும் திறமையும் பார்த்து பல இயக்குனர்கள் இவரை தேடி போய் வாய்ப்பு கொடுக்கிறார்கள்.

அப்படித்தான் ரஜினி நடிப்பில் உருவாகி வருகின்ற வேட்டையன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை துஷாரா விஜயன். இவர் ஆர்யாவுக்கு மனைவியாக மாரியம்மா என்ற கேரக்டரில் சர்ப்பட்ட பரம்பரை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

Also read: அசுரத்தனமா தனுஷ் செய்யும் வேலை.. நாகார்ஜுனா மட்டுமல்ல மொத்த அக்கட தேசமும் மண்டியிட்ட சம்பவம்

அதன் பிறகு அநீதி என்னும் திரில்லர் படத்தில் அர்ஜுன் தாஸ்க்கு ஜோடியாக நடித்து அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார். தற்போது இவருக்கு வேட்டையன் படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தனுஷ் தற்போது அவருடைய 50வது படமான ரயான் படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இதிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் கமிட் ஆகி இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் நடிப்பு அசுரன் தனுஷ் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா இருவரும் இணைந்து தரமான சம்பவத்தை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இவர்களுடன் சேர்ந்து நடிப்பு ராட்சசியாக துஷாரா விஜயனும் களம் இறங்கியதால் இப்படம் தாறுமாறான வெற்றியை கொடுக்கப் போகிறது.

சினிமாவில் திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப தொடர்ந்து முன்னணி ஹீரோயினாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார். இதனை கெட்டியாக பிடித்து அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கேரக்டரையும் பெண்கள் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறார்.

Also read: தனுஷ் போட்ட தூண்டிலை டம்மி ஆக்கிய இளையராஜா.. 2 அம்புகளை விட்டும் கேடயத்தை தூக்கி தடுத்து வீசிய இசைஞானி

Sharing Is Caring:

அதிகம் படித்தவை