தனுஷ் போட்ட தூண்டிலை டம்மி ஆக்கிய இளையராஜா.. 2 அம்புகளை விட்டும் கேடயத்தை தூக்கி தடுத்து வீசிய இசைஞானி

Dhanush – Illaiyaraja : இளையராஜாவின் பயோபிக் படத்தை இப்போது எடுக்க போகின்றனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பயோபிக் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் இசைஞானியின் வாழ்க்கை வரலாறு என்பதால் எந்த ஹீரோ நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமுமே இருக்கும்.

அந்த வகையில் தனுஷ் தான் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இந்த படத்திற்காக தனுஷ் போட்ட தூண்டில்கள் எல்லாவற்றையுமே டம்மியாக்கி விட்டாராம் இளையராஜா. அதாவது இப்படத்தை தனது வொண்டர் பார் தயாரிப்பு நிறுவனத்தில் மூலம் தயாரிக்க நினைத்தார் தனுஷ்.

அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு இளையராஜாவே தனது சொந்த தயாரிப்பில் பயோபிக் படத்தை எடுக்க இருக்கிறார். அதேபோல் இந்த படத்தில் இயக்குனர் பால்கியையயும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இதனால் தனுஷ் தனக்கு தெரிந்த இரண்டு இயக்குனர்களை சிபாரிசு செய்து இருக்கிறார்.

Also Read : தனுஷ் என்னைவிட திறமைசாலி.. ஓவரா துதிப்பாடும் கண்ணாடி நடிகர்

அதாவது முதலாவதாக கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் மற்றும் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனையும் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் இந்த இருவரையுமே இளையராஜா வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். இவ்வாறு தனுஷ் விடும் எல்லா அம்பை புசுன்னு ஆக்கிவிட்டார் இளையராஜா.

இதைத்தொடர்ந்து இளையராஜா தனது சொந்த தயாரிப்பில் அவர் நினைத்த இயக்குனரை வைத்து இந்த படத்தை எடுக்க உள்ளார். தனுஷ் இப்போது அவருடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இளையராஜாவின் பயோ பிக் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Also Read : யானை போல் தலையில் மண்ணை வாரி போடும் இயக்குனர்கள்.. தனுஷ் முதல் ஃபேமிலி ஆடியன்ஸை இழந்த 5 படங்கள்

- Advertisement -spot_img

Trending News