விஜய் கட்சி ஆரம்பித்ததால் இப்பவே நூல் விடும் நடிகை.. ஆசையை வெளிப்படையாக போட்டு உடைத்த ஹீரோயின்

Actress who wants to join Vijay party: விஜய் அரசியலில் இறங்கிவிட்டார் என்று உறுதியான நிலையில் அனைத்து பக்கங்களிலும் இருந்து ஒவ்வொருவரும் ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என பெயரிட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் போட்டியும் இல்லை, ஆதரவும் இல்லை. அதே நேரத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து தனது கட்சி செயல்படும் என விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அடுத்ததாக எலக்சன் வரும் வரை என்னுடைய முழு கவனமும் தேர்தலை நோக்கி தான் இருக்கும். அதற்கு முன்னதாக என்னுடைய 69 ஆவது படத்தை நடித்து முடித்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இப்படம் முழுக்க முழுக்க அரசியல் படமாகவும் மக்களுக்கு இதன் மூலம் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்கும் படமாகவும் இருக்கும் என்பதை நோக்கி பயணிக்க போகிறார்.

இந்நிலையில் இவருடைய அரசியலின் வருகையை குறித்து சில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை வாணி போஜன் அவரும் அவருடைய கருத்தையும், ஆசையும் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதாவது ஒரு கடை திறப்பு விழாவிற்கு பங்கேற்ற வாணி போஜன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் பொழுது சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Also read: ரஜினியின் மாபெரும் ஹிட் படத்தில் வாய்ப்பு கேட்ட விஜய்.. உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணிய கமல்

அப்பொழுது விஜய்யின் அரசியல் வருகையை பற்றி பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு “நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்”. அதனால் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை நான் வரவேற்கிறேன். அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் என்ன மாற்றத்தை செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறி இருக்கிறார்.

அத்துடன் எனக்கும் அரசியல் மீது அதிக ஆசை உண்டு. நான் “செங்களம்” என்ற ஒரு வெப் சீரியஸில் நடிக்கும் போது அரசியலில் இருக்க வேண்டும் என்று மிகப்பெரிய ஆசை இருந்தது. அதே மாதிரி எப்படியாவது அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை இப்பொழுதும் என்னிடம் இருக்கிறது என்று கூறி விஜய் கட்சியில் சேர்வதற்கு இப்பமே ஒரு பிள்ளையார் சுழி போட்டு ரொம்பவே பாசிட்டிவாக பேசி இருக்கிறார்.

Also read: விஜய் கைவிட்டதால் விக்ரமிடம் சரணடைந்த இயக்குனர்.. சியான் வெற்றி படத்தின் பார்ட் 2