ரஜினியின் மாபெரும் ஹிட் படத்தில் வாய்ப்பு கேட்ட விஜய்.. உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணிய கமல்

Vijay asked for a chance in Rajini’s big hit film: சினிமா திரையுலகில் பெரிய நடிகர்களின் படங்களில் மற்றொரு ஹீரோக்களை நடிக்க வைப்பது காலங்காலமாக நிகழ்ந்து வருகிறது. அதிலும் இன்றைய காலத்தில் ஹீரோவாக ஒரு முன்னணி நடிகர் கமிட்டாகி இருந்தால் அவருக்கு வில்லனாக இன்னொரு முக்கியமான நடிகரை நடிக்க வைத்து விடுகிறார்கள். இதை தற்போது ரசிகர்களும் விரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இதே மாதிரி ரஜினி நடிப்பில் மாபெரும் ஹிட்டான ஒரு படத்தில் நடிப்பதற்கு விஜய் சான்ஸ் கேட்டிருக்கிறார். 1999 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா படத்தில் ரஜினி, சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் நடிப்பில் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது.

இப்படத்தில் எப்படியாவது நமக்கு ஒரு சீன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று விஜய் நேரடியாக இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறார். அதற்கு காரணம் ரஜினியின் தீவிர ரசிகராக அப்பொழுது விஜய் இருந்ததால் அவருடைய படத்தில் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்று அலைந்திருக்கிறார்.

Also read: சூசகமாக தோல்விக்கு அவர்தான் காரணம் என்று சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. மொத்த பழியையும் தூக்கி சுமக்கும் அனிருத்

அந்த நேரத்தில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படையப்பா படத்தின் கதை இவருக்கு ரொம்பவே பிடித்து போனதால் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் இயக்குனர் விஜய் சொல்வதை பெருசாக எடுத்துக் கொள்ளாமல் அவரை நிராகரித்து விட்டார். இந்த ஒரு விஷயத்தை விஜய் முன்னாடி அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அந்த பழைய வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

இதற்கிடையில் படையப்பா படத்தில் மிகப்பெரிய பஞ்சாயத்து ஒன்னு போயிருக்கிறது . அதாவது காட்சிகள் எடுத்து முடித்த பொழுது கிட்டத்தட்ட 4 மணி நேரம் வரை போயிருக்கிறது. இதை என்ன பண்ணுவது என்று தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருக்கும் பொழுது இயக்குனர் இந்த படத்திற்கு இரண்டு இடைவேளை வைத்து அனைத்து காட்சிகளையும் வெளியிடலாம் என்று முடிவெடுத்திருந்திருக்கிறார். ஆனால் அப்பொழுது உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணிய கமல் அதெல்லாம் சரிப்பட்டு வராது.

இன்னும் இரண்டு மூன்று இயக்குனர்களை வைத்து எது முக்கியமான காட்சிகள் என்று ஆராய்ந்து அதை மட்டும் வடிவமைத்து படமாக்கினால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு ஐடியாவை கொடுத்து இருக்கிறார். இவர் கொடுத்த ஐடியாவின் படி ரஜினியும் இயக்குனரிடம் கமல் சொன்ன மாதிரியே செய்துவிடலாம் என்று கூறி இருக்கிறார். அதன் பின்னே இப்படம் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்து இருக்கிறது.

Also read: லால் சலாம் ரிலீஸ் முடிந்த கையோடு ரஜினி வீட்டில் நடக்கப் போகும் முக்கிய நிகழ்வு.. தலைவருக்கு இருந்த பெரிய குறை