புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மணிரத்தினத்தின் சூப்பர் ஹிட் படத்தை தவற விட்ட நடிகை.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளை இயக்குபவர் மணிரத்னம். இவர் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களுக்கு மாஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஒரு திரை பட்டாளமே நடித்துள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், லட்சுமி, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நாசர், ரஹ்மான், நிழல்கள் ரவி, ரியாஸ் கான், சரத்குமார், விக்ரம் பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கான வேலைகளில் மணிரத்தினம் மும்முரம் காட்டி வருகிறார். இந்நிலையில் மணிரத்னம் மௌனராகம், நாயகன், தளபதி என ரசிகர்கள் இன்று வரை கொண்டாடும் படங்களை எடுத்த அசத்தியுள்ளார். அந்த வகையில் மணிரத்னத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஒரு நடிகை தவற விட்டுள்ளார்.

மணிரத்னத்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் ஏங்கி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மணிரத்னம் தனது படத்திற்காக அந்த நடிகையை அணுகிய போது தான் வேறு படங்களில் பிசியாக இருப்பதாக சொல்லி அந்த படத்தை நிராகரித்துள்ளார்.

அதாவது மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் வெளியான ரோஜா படம் தான் அது. இப்படத்தில் முதலில் மதுபாலா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு தான் இந்த வாய்ப்பு வந்துள்ளது.

ஐஸ்வர்யா பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காததால் ஆறு, வேல் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் இப்பொழுதும் கூட ஐஸ்வர்யா மணிரத்னத்தின் படத்தை தவறவிட்டதை எண்ணி பெரும் வருத்தத்தில் இருக்கிறாராம். அதை நினைத்து இப்போ வருந்தி, புலம்பி ஒன்னுத்துக்கும் புரோஜனம் இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News