விஜய்யை அட்டை பூச்சி போல ஒட்டிக் கொள்ளும் நடிகை.. தளபதி-67 வாய்ப்புக்காக செய்த வேலை

பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக மாஸ் காட்டி வரும் விஜய் உடன் ஒரு திரைப்படத்திலாவது ஜோடி சேர்ந்து நடிக்கப்பட வேண்டும் என்று பல ஹீரோயின்களும் போட்டி போட்டு வருகின்றனர். அதில் இளம் நடிகைகள் தான் வாய்ப்புக்காக போராடி வருகின்றனர். இப்படி எத்தனை போட்டி இருந்தாலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைகளுக்கு தான் வாய்ப்பு அமைகிறது.

அந்த வகையில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இவர் விஜய்யை எந்த அளவுக்கு பிடிக்கும் என்று பல பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அதனாலேயே இவருக்கு இந்த பட வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டது.

Also read: இந்த இங்கிலீஷ் படத்தின் காபிதான் தளபதி-67 கதையா.? அட்லீ போல சிக்கலில் மாட்டிய லோகேஷ்

அது மட்டுமல்லாமல் இயக்குனரும், தயாரிப்பாளரும் தெலுங்கு திரை உலகில் முன்னணியில் இருக்கும் காரணத்தினாலும் இவருக்கு விஜய்க்கு ஜோடி ஆகும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. இந்த அதிர்ஷ்டத்தை அவர் அடுத்த படத்திலும் அடைய நினைக்கிறாராம் அதாவது விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் ஹீரோயின் வாய்ப்பை பெற இவர் ரொம்பவும் மெனக்கெட்டு வருகிறாராம்.

ஏற்கனவே இந்த படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதில் ராஷ்மிகாவும் வாய்ப்பை தட்டி தூக்குவதற்காக சில தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறாராம். அந்த வகையில் இவர் தற்போது லோகேஷ் கனகராஜை போனில் படாத பாடுபடுத்தி வருகிறாராம். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தற்போது தளபதி 67 ல் கவனம் செலுத்தி வரும் லோகேஷ் ராஷ்மிகாவுக்கு இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.

Also read: அடி மடியிலேயே கை வைத்த வில்லன்.. தளபதி 67-ல் லோகேஷுக்கு பிடித்த பெரும் தலைவலி

ஆனாலும் ராஷ்மிகா விஜய்யிடமும் இது குறித்து பேசி வருகிறார். வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கும் நட்பின் அடிப்படையில் அவர் அடிக்கடி விஜய்க்கு ஃபோன் போட்டு பேசுவாராம். தற்போது படம் முடிவுற்ற நிலையில் அடுத்த பட வாய்ப்பை பெறுவதற்காக அவர் விஜய்யை அட்டைப்பூச்சி போல் ஒட்டிக் கொண்டே திரிகிறார்.

இதைப் பார்த்த பலரும் இது ரொம்பவும் ஓவர் என்று விமர்சனம் செய்து வந்த நிலையில் படம் வெளியானால் எங்களுடைய ஜோடி பொருத்தம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும். அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் விஜய்க்கு நான் தான் ஜோடி என்று பெருமையாக அவர் கூறி வருகிறாராம். இவர் கூறுவதை பார்த்தால் தளபதி 67 இவர் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Also read: விக்ரம் படத்தை மிஞ்சும் பிரமோஷன்.. விரைவில் வெளிவர உள்ள தளபதி 67 டீசர்

Next Story

- Advertisement -