பிக்பாஸில் சவுண்டு சரோஜாவாக மாறிய நடிகை.. தர லோக்கலாக மாறிய பிக்பாஸ் வீடு

இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் சீசன் 6 பயங்கர குதூகலமாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வரலாற்றிலேயே சண்டைக்கு பெயர் போன சீசன் என்றால் அது கடந்த சீசன் 5 மட்டும்தான். ஆனால் அதையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது இந்த சீசன்.

இதில் போட்டியாளர்கள் ஒவ்வொரு நாளும் ரகம் ரகமாக சண்டை போட்டு பார்ப்பவர்களின் பிபியை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் மைனாவின் அட்டகாசம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கத்துவது, கோபப்படுவது என்று அவருடைய நடவடிக்கைகள் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

Also read : பிக்பாஸ் போய் பத்து பைசா பிரயோஜனம் இல்ல.. அது ஒரு பித்தலாட்டம் எனக் கூறி பப்ளிசிட்டி தேடும் நடிகர்

அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் மைனா பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதம் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீடு பிபி சேனலாக மாறும் என்ற அறிவிப்பை பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி இரண்டு டீமாக பிரிந்த போட்டியாளர்கள் தங்களுக்கான டாஸ்கை முடிந்த அளவு நன்றாக செய்து வருகின்றனர்.

அதில் நேற்று மைனா நந்தினி மற்றும் மணிகண்டன் இருவரும் சேர்ந்து சமையல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி காட்டினார்கள். அதில் குழந்தைகள் போன்று மாறிய அவர்கள் இருவரும் காமெடி பண்ணுகிறோம் என்ற பெயரில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் நிச்சயமாக அவர்கள் பார்ப்பதற்கு குழந்தைகள் போல் தெரியவில்லை. அவர்களின் காமெடி அலப்பறையும் ரசிக்கும் வகையிலும் இல்லை.

Also read : அடுத்த கவின், லாஸ்லியா இவங்கதான்.. புருஷன், பொண்டாட்டியா தான் வெளியில போவாங்க போல

அதனால் அவர்களுக்கு நடுவர்கள் நான்கு மதிப்பெண்களை கொடுத்தார்கள். இதை தாங்கிக் கொள்ள முடியாத மைனா அது எப்படி எங்களுக்கு கொடுக்கலாம் என்று சண்டைக்கு பாய்ந்தார். நடுவரான விக்ரமன் அது குறித்து கொடுத்த விளக்கத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

ஒரு போட்டி என்று வந்துவிட்டால் அதில் இருக்கும் நிறை, குறைகளை போட்டியாளர்கள் ஏற்றுக் கொள்வது தான் நல்ல போட்டியாளருக்கு அழகு. ஆனால் மைனா என்னை யாரும் குறை சொல்லக்கூடாது என்பது போல் பேசியது பார்ப்பவர்களை எரிச்சல்படுத்தியது. மேலும் மைனா இந்த நிகழ்ச்சியின் மூலம் இதுவரை சேர்த்து வைத்திருந்த அத்தனை கெட்ட பெயரையும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார் என்பது மட்டும் உண்மை.

Also read : 17 வயதிலேயே திருமணம், ஏகப்பட்ட லவ் பிரேக்கப்.. பிக்பாஸ் நடிகையைப் பற்றி புட்டு புட்டு வைத்த முன்னாள் காதலன்

- Advertisement -