ரஜினி பாணியில் இமயமலைக்கு சென்ற நடிகை.. விரக்தியில் எடுத்த எதிர்பாராத முடிவு

பல வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார். சிறிது நேரம் கிடைத்தாலும் போதும் அவர் உடனே இமயமலைக்கு சென்று விடுவார். அங்கு தியானம் செய்வது சித்தர்களை சந்திப்பது என்று அதிக நேரத்தை செலவிடுவார்.

இதன் மூலம் அவருக்கு அதிக புத்துணர்ச்சி கிடைப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் ரஜினியின் பாணியில் இமயமலைக்கு சென்று வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என்று பெயர் எடுத்தவர் நடிகை அஞ்சலி. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் அசத்தலாக நடிக்கும் திறமை இவருக்கு இருக்கிறது. ஆனால் இப்போது அவர் அவ்வளவாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

தெலுங்கு திரை உலகில் கவனம் செலுத்தி வந்த அஞ்சலி அங்கேயே ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இதனால் அவர் இனி தமிழில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் நடிகர் ஜெய்யுடன் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வி தானாம்.

பல வருடங்களாக காதலித்து வந்த அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இப்போது பிரேக் அப் செய்து விட்டனர். இதனால் மனதளவில் சோர்ந்து போன அஞ்சலி தற்போது ஆன்மீகத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

அதன் காரணமாகத்தான் அவர் தற்போது இமயமலைக்கு சென்று வந்திருக்கிறார். மேலும் அவருக்கு அதிக அளவில் மனச்சோர்வு ஏற்படும் போது அவர் இயக்குனர் ராமுக்கு போன் செய்து பேசுவாராம். அஞ்சலியை சினிமாவில் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ராம். இதனால் அஞ்சலி அவரை தன் அப்பா ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறார். அது மட்டுமல்லாமல் அஞ்சலி தற்போது சினிமாவில் நம்பும் ஒரே நபரும் அவர் தானாம்.

Next Story

- Advertisement -