Bigg Boss: சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் என்டர்டைன்மெண்ட் ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். இதுவரை விஜய் டிவியில் ஆறு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், 7வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கியது. தற்போது 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், இந்த சீசனில் தான் முதன்முதலாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகளாக பிரித்துள்ளனர்.
இதில் ஸ்மால் பாஸ் வீடு சிறைச்சாலை போன்ற விதிகள் உடன் இயங்கி வருகிறது. இந்த ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா! என ரவீனா மற்றும் மணி இருவரும் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்வதை வைத்து கிழித்து தொங்க விடுகின்றனர். இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்து கடித்து விளையாடுவதும் என இவர்களது சேட்டை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
இதை பார்த்ததும் வெறியேறிய பிக் பாஸ் ரசிகர்கள், ‘இதுக்கு எதுக்கு பிக்பாஸ் வீடு, ஹோட்டலில் ரூம் போட வேண்டியதுதானே!’ என சோசியல் மீடியாவில் கழுவி ஊற்றுகின்றனர். விஜய் டிவியில் மௌனராகம் சீரியலில் கதாநாயகியாக நடித்த ரவீனா ஒரு டான்ஸரும் கூட.
இவர் டான்ஸர் மணி உடன் வெளிநாடுகளில் எல்லாம் வெக்கேஷன் சென்ற புகைப்படங்கள் மற்றும் அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய வீடியோஸ் எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. வெளியில் இருக்கும் போதே இவர்கள் இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் செய்வார்கள். இப்போது பிக் பாஸ் வீட்டில் ஜோடியாக போனபின், இதற்கு முன்பு இருந்த காதல் ஜோடிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சில்மிஷம் செய்கின்றனர்.
Also Read: பத்த வச்ச பிக்பாஸ், பற்றி எரியும் வீடு.. வந்த வேலையை சிறப்பா ஆரம்பித்த கவின் கூட்டாளி
முன்பு ஏடிகே எப்படி பெண் போட்டியாளர்களை கடித்து வைத்து சர்ச்சையை கிளப்பினாரோ இப்போது ரவீனா மணியின் கையைப் பிடித்து கடித்து வைத்துள்ளார். மணி கையில் அவருடைய பல் அச்சை பார்த்து என்னுடைய பல் எவ்வளவு அழகா இருக்கு என்றும் கொஞ்சுகிறார்.
உடனே மணி, ‘லவ்வர்ஸ்கள் இப்படிதான் மாறி மாறி கடித்து அதில் டாட்டூ போடுவது ட்ரெண்டிங்கில் இருக்குது’ என்று கூறுகிறார். பின்பு அவர் கையில் இருக்கும் லிப்ஸ்டிக் கறையை ரவீனாவின் மீது துடைக்கிறார். உடனே ரவீனா மணியின் கையை இழுத்து பிடித்து முத்தம் கொடுக்கிறார். பொது நிகழ்ச்சியில் என்னென்னவெல்லாம் செய்யக்கூடாதோ அதெல்லாம் ரவீனா- மணி ஜோடி செய்கின்றனர்.