சன்டிவியின் சித்தி 2 சீரியலில் கலக்கப் போகும்.. விஜய் டிவியின் தேன்மொழி சீரியல் பிரபலம்!

ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சியில் சித்தி என்கிற சீரியல் என்றாலே ராதிகா சரத்குமார் தான் நினைவிற்கு வருவார். தற்போது அந்த தொடரின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ராதிகா சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு இந்த நாடகத்தை விட்டு வெளியேறி உள்ளார்.

தவிர்க்க முடியாத முக்கிய காரணத்தினால் தான் வெளியேறுவதாக ராதிகா சரத்குமார் தெரிவித்திருந்தார். அதற்கு பிறகும் இந்த நாடகம் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. ரசிகர்கள் தொடர்ந்து பார்க்கக்கூடிய நாடகங்களில் ஒன்றாக சித்தி2 மாறியுள்ளது.

இந்த தொடரில் கவின் மற்றும் வெண்பா ஆகிய இருவரும் சுப்புலக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் வேலை செய்து வருகின்றனர். ஆனால் கவின் இங்கு தான் வேலை செய்கிறான் என்று வெண்பாவிற்கும், வெண்பா இங்குதான் வேலை செய்கிறாள் என்று கவினுக்கும் தெரியாது. இதுபோன்று பல சுவாரஸ்யங்களும், வில்லத்தனமும் நிறைந்து இந்த கதை நகர்ந்து வருகிறது.

ஆனாலும் இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகளை அவ்வப்போது மாற்றி வருகிறார் இயக்குனர். அந்த வகையில் தற்போது சுப்புலக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகைக்கு பதிலாக வேறு பிரபல நடிகையை களமிறக்கி உள்ளனராம்.

chithi2
chithi2

தற்போது சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் உஷா எலிசபெத் என்ற நடிகை நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தேன்மொழி பிஏபிஎல் என்ற நாடகத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சுப்புலக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை திடீரென தான் விலகுதாக அறிவித்துள்ளார். அதற்குப் பின்னரே இந்த நடிகையை தேர்ந்தெடுத்து உள்ளனராம்.