முதன்முதலாக கமலை டான்ஸ் மாஸ்டராக்கி அழகு பார்த்த நடிகை.. 18 வயதில் செய்த சாதனை

The Actress Gave Dance Master Chance To Kamal: நான்கு வயதில் சினிமாவில் நடிக்க துவங்கிய உலகநாயகன் கமலஹாசன் அதன் பிறகு தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என இவர் செய்யாத விசயமே இல்லை. இவரை 18 வயதில் தன்னுடைய படத்தில் டான்ஸ் மாஸ்டர் ஆக ஆட வைத்து பிரபல நடிகை ஒருவர் அழகு பார்த்திருக்கிறார்.

கமலஹாசன் மூத்த நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி உடன் ஒரு சில படங்கள் மட்டுமே இணைந்து நடித்திருந்தாலும் ஜெயலலிதாவுடன் அவர் ஐந்து படங்களில் பணிபுரிந்துள்ளார். அன்னை வேளாங்கண்ணி படத்திற்கு பிறகு 1973 ஆம் ஆண்டு முத்துராமன். ஜெயலலிதா நடிப்பில் வெளியான சூரியகாந்தி படத்தில் கமலும் இணைந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஓ மெரி தில்ரூபா’ என்ற பாடலின் காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் அந்தக் காட்சியில் ஜெயலலிதாவின் டிரஸ் அவருக்கு பிடிக்கவில்லை என்பதால், அதை ரீடேக் எடுக்கலாம் என்று கேட்டிருக்கிறார். ஆனால் டைரக்டர், ‘வேண்டாம் எனக்கு மீண்டும் 8000 செலவாகிவிடும். இதுவே ஓகே தான்’ என சொல்லிவிட்டார்.

Also Read: பிரபுவின் பிரமிக்க வைக்கும் சொத்து மதிப்பு.. அன்னை இல்லம், சாந்தி தியேட்டர் என குவித்த சிவாஜி

இருப்பினும் ஜெயலலிதாவின் வேண்டுகோளுக்கு பிறகு மறுபடியும் அந்த காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் அந்த பாடலின் நடன இயக்குனர் தங்கப்பன் ஊரில் இல்லை, என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழுவினர் திணறினர். உடனே ஜெயலலிதா, அவர் இல்லை என்றால் என்ன, அவர் அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டரை பண்ண வைக்கலாம்.

அந்த அசிஸ்டன்ட் தான் உலக நாயகன் கமலஹாசன். அப்போது கமலுக்கு வயது வெறும் 18 தான். ஆனால் ஜெயலலிதாவிற்கு 25 வயதானது. அந்தப் பாடலுக்கு கமல் டான்ஸ் ஆடி காட்ட, ஜெயலலிதா மற்றும் முத்துராமன் இருவரும் ஆடி, அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. அதுமட்டுமல்ல இந்தப் பாடலை ஜெயலலிதா தனது சொந்த குரலில் டிஎம் சௌந்தரராஜன் உடன் சேர்ந்து பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா- கமல் இணைந்த 5 படங்கள் 

இந்த படத்திற்கு பிறகு மறுபடியும் அன்பு தங்கை என்ற படத்தில் கமலஹாசன் புத்தர் கெட்டப்பில் சிறப்பு தோற்றத்தில் ஜெயலலிதாவுடன் நடித்திருந்தார். அது மட்டுமல்ல இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு ஜெயலலிதாவிற்கு நடன இயக்குனராகவும் அவர் பணி புரிந்துள்ளார்.

மேலும் சினிமா பைத்தியம், உன்னை சுற்றும் உலகம் போன்ற 5 படங்களில் ஜெயலலிதா மற்றும் கமல் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். ஆனால் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுடன் ஒரு படம் கூட இணைந்து பணிபுரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜெயலலிதா- கமல்

kaml-JJ-Cinemapettai
kaml-JJ-Cinemapettai

Also Read: கண்ணியமாக நடந்து கொள்ளும் கமல், சிம்பு.. சிவகார்த்திகேயன் போல் மாட்ட போகும் 5 ஹீரோக்கள்